விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட அசின்.. தட்டிப் பறித்த திரிஷா! எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் நடிகை திரிஷா வலம் வருகிறார். இவர் பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு சூர்யாவுடன் இணைந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து மனசெல்லாம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இந்தத் திரைப்படமும் தோல்வியை தழுவ இதற்கு அடுத்ததாக திரிஷா நடித்த திரைப்படம் சாமி. விக்ரமுடன் இவர் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து திரிஷா அடுத்ததாக விஜய், அஜித், சூர்யா, ரஜினி, தனுஷ், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்கள் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு,மலையாளம் என பழமொழி படங்களிலும் இணைந்து நடித்து வருகிறார். திரைப்படங்களை தொடர்ந்து வெப் சீரிசலும் திரிஷா களம் இறங்கி கலக்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படம் இவரை பான் இந்தியா ஹீரோயின் ஆக உயர்த்தியுள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் திரிஷாவின் ரசிகராக மாறி அவரை கொண்டாடி வருகின்றனர். அதைத்தொடர்ந்து திரிஷா சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் மற்றும் அஜித்தை தொடர்ந்து கமலஹாசனின் 234வது திரைப்படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் திரிஷா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று திருப்பாச்சி. இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக திரிஷா ஹீரோயின் ஆக இந்த படத்தில் நடித்திருப்பார். கில்லியை தொடர்ந்து வெளியான இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார்.

விஜய்யுடன் போட்டி போட்ட ஏ.ஆர் முருகதாஸ்! நான்கு வருடங்கள் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?

இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது நடிகை அசின். இயக்குனர் பேரரசு நடிகை அசினின் ஒரு தெலுங்கு படத்தை பார்த்து அவரின் நடிப்பு மிகவும் பிடித்துப் போக திருப்பாச்சி படத்தில் ஹீரோயின் ஆக நடித்த பேசி இருந்தார். ஆனால் நடிகை அசின் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் செய்யப்பட்டிருந்த நிலையில் திருப்பாச்சி படத்திற்கான நாட்களை கொடுக்க முடியாமல் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அதை எடுத்து திரிஷா அந்த படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் பேரரசு திருப்பாச்சி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் சிவகாசி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். முதல் படத்தில் தவற விட்ட வாய்ப்பை இயக்குனர் அடுத்த படத்தில் சாத்தியமாக்கியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews