அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!

ஆடிமாதம் முதல் வெள்ளியில் நாம் வணங்க வேண்டிய பெண் தெய்வம் சொர்ணாம்பிகையாகும்.. சொர்ணாம்பிகை விழுப்புரம் மாவட்டம் பொன்பரப்பி என்னும் ஊரில் எழுந்தருளி உள்ளாள். அவளைத்தான் நாம் நம் இல்லங்களில் எழுந்தருளச்செய்து, அவளுக்கு சர்க்கரை பொங்கல், பாயாசம் நெய்வேத்தியம் செய்து, சிறு பெண் குழந்தைகளை அம்மனாய் பாவித்து பூஜை செய்து, அவரவர் வசதிக்கேற்ப ஜாக்கட் பிட், சீப்பு, கண்ணாடி, மஞ்சள் குங்குமம் தர வேண்டும்.

சொர்ணாம்பிகை மூலமந்திரம்.
வேதாந்த வேத்யை விதுசேகராயை
வித்யுத் ஸஹஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை
ஸுகவன ஷேத்ர நிவாஸிகாயை
ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை ! ,

பொருள்.. வேதாந்தத்தின் வேரென விளங்கும் வேத பொருளானவளும் , அமிர்த மயமான சந்திரனை சிரசில் சூடிக்கொண்டவளும் , ஆயிரம் கோடி சூரியர்கள் ஒன்றாய் சேர்ந்த மின்னல் வெட்டு போல் ஒளிர்பவளும் , சுகவன ஷேத்ரத்தை வாசஸ்தலமாக கொண்டவளுமான அன்னை ஸ்ரீசொர்ணாம்பிகைக்கு வெற்றி உண்டாவதாக! என்பதாகும்.

சொர்ணாம்பிகையை வணங்கி பொன், பொருளுடனும் மனமகிழ்வுடனும், நோய் நொடியில்லாமல் வாழ்வோம்…

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!

Published by
Staff

Recent Posts