புஷ்பா நடிகரின் பிக் ஹார்ட் செயல்: வைரலாகும் வீடியோ!!

சமூக வலைதளங்களில் இன்புளூயன்சராக இருப்பதும், அதிகமான ஃபாலேவர்ஸ் வைத்திருப்பதும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இனிவரும் காலத்திலும் இது தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,யூடியூப் போன்ற சோஷியல் நெட் ஒர்க் பக்கங்களில் ஒருவர் மற்றவரை பின் தொடர்வது அதன் மூலம் அதிக பாலேவர்ஸ் கொண்ட இன்புளூயன்சராக இருப்பது என பல விஷயங்கள் அடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றாலே ஆட்டம் பாட்டமாக இருக்கும் அதற்கு காரணம். டிரெண்டிங்கில் இருக்கும் பாடலுக்கு டான்ஸ் செய்தால், அந்த வீடியோவை பலரும் பார்ப்பார்கள். அதன் மூலம் பாலேவர்ஸ் எண்ணிக்கை உயரம்.

இது தனிநபரின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் கொடுக்கிறது. வெறும் ஆட்டம் பாட்டம் என்று மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியம், தொழில் சம்பந்தமான என அனைத்து விதமான ரீல்ஸ்களும் காணமுடியும். அவரவர் தேவைக்கு ஏற்ப இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒருவருக்கு பாலேவர்ஸ் எளிதாக கிடைப்பதில்லை. அதற்கென சில மெனக்கெடுதல்கள் தேவைப்படுகிறது. சினிமா பிரபலங்கள் என பலரும் இந்த சோஷியல் நெட் ஒர்க்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாலேவர்ஸ் தன்னால் வரத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் சாதாரண மக்களுக்கு அது கிடைப்பது கடினம். அப்படி ஒரு சாதாரண பெண்ணுக்கு ஃபாலேவர்ஸ் அதிகரிக்க தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் உதவி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை புஷ்பா புகழ் அல்லு அர்ஜூன் தான். தன் வீட்டில் உதவியாளராக பணிபுரியும் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலேவர்ஸ் அதிகரிக்க உதவி செய்திருக்கிறார்.

வீடியோவில் அல்லு அர்ஜூன் அருகில் பணி பெண் நிற்க, உன்னுடைய பாலேவர்ஸ் அதிகரிக்கதான் இந்த வீடியோ என்று அல்லு அர்ஜூன் கூறுகிறார். அந்த பெண் ஆமாம் சார் என்று சொல்கிறார். உன்னுடைய இப்போதைய பாலேவர்ஸின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்க அதற்கு 13K என்று  அந்த பெண் கூறுகிறார். எவ்வளவு பாலேவர்ஸ் வேண்டும் என்று கேட்தற்கு 30 K என்று அந்த பெண் கூறுகிறார்.

இந்த வீடியோ மூலம் ஃபாலேவர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்குமா? என்று அல்லு அர்ஜூன் கேட்க, ஆமா சார் என்று சொல்வதோடு வீடியோ முடிவடைகிறது. வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்காக அல்லு அர்ஜூன் செய்த இந்த செயல் மக்களை ஆச்சார்யப்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.