இவங்க எல்லாரும் தான் என் ரோல் மாடல்… எதற்காகவும் இதை விட்டுக் கொடுக்க மாட்டேன்… நேரலையில் ரசிகர்களிடம் பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்…

மாதம்பட்டி ரங்கராஜ் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வரும் ‘கோடி அருவி கொட்டுதே’ என்ற பாடல் மெகாஹிட் ஆனது. அந்த படத்தை தெரியாதோர் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம். அப்படி ஒரு ரசிக்கும்படியான மெலோடி பாடல்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு நடிகராக அறியப்பட்டதை விட சமீப காலத்தில் இவர் செய்யும் தொழிலான சமையல் கேட்டரிங் சர்வீஸ் மூலமாக மிக பிரபலமடைந்தார். சைவத்திலே அசைவம் மாதிரியான அதே நேரத்தில் ஆரோக்யமாவும் உணவை தயார் செய்து கொடுப்பதில் தரமானதாக இருக்கிறது இவர் நிறுவனம். தற்போது செலிபிரிட்டிஸ் அனைவரும் தங்கள் வீட்டு விழாக்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் கேட்டரிங் நிறுவனத்தையே நாடுகின்றனர்.

திரைப்பட குழுவினருக்கு சமைத்து கொடுக்கும் சிறு நிறுவனமாக ஆரம்பித்து தற்போது மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற மாபெரும் நிறுவனமாக தனது உழைப்பினால் வளர்ந்துள்ளர் மாதம்பட்டி ரங்கராஜ். இவரது தந்தை தங்கவேலு சமையல்கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் எங்களால் ஆயிரக்கணக்கான விருந்தினர்களுக்கு சமைத்து பரிமாற முடியும் என்று கூறுகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சமைத்ததில் கொய்யா சட்னி மற்றும் மாதுளம் பழம் பொரியல் மிக பிரபலமானது.

இந்த நிலையில் விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘குக் வித் கோமாளி’ யின் ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக தோன்றவுள்ளார். செஃப் தாமு அவர்களுடன் இணைத்து வரவுள்ளார். மேலும் பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது தனது ரசிகர்களிடம் பேசுவதற்காக நேரலை வந்தார்.

அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளர். உங்கள் ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு, என்னை சுற்றி இருப்பவர்களில் யாரிடம் எல்லாம் நல்ல விஷயங்கள் இருக்கிறதோ அவர்கள் தான் என் ரோல் மாடல் என்று கூறியுள்ளார். நீங்கள் குக் வித் கோமாளியில் நடுவராக வர இருக்கிறீர்கள், படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், இதனால் உங்கள் சமையல் பிசினஸ் பாதிக்குமா என்ற கேள்விக்கு, எல்லாத்தையும் கரெக்டா பிளான் பண்ணி ஸ்கெடியுள் போட்டு தான் செய்கிறேன். இதனால் என் சமையல் தொழில் பாதிக்காது. எல்லாவற்றிற்கும் முதலில் முக்கியமானது எனது சமையல் பிசினஸ் தான், அதை எக்காரணம் கொண்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பதிலளித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews