நம்பர் 1 இல் சம்பளத்தை பேசி முடித்த அஜித்! ஏகே 63 படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார், மேலும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் மிக பிரம்மாண்டமாக வெளியானது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி அன்று கூட விடுமுறை இல்லாமல் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அஜர்பைஜானில் நிலவும் காலநிலை காரணமாக ஷெடுலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பனிப்புயலின் காரணமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகளில் சில தோய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக படக்குழு சென்னை திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து மூன்றாவது செடியூல் அஜர்பைஜான் நாட்டில் இந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விடாமுயற்சி படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் விடாமுயற்சி திரைப்படத்திற்காக அஜித் ஒதுக்கிய கால்ஷீட் ஜனவரி மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதன் பின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று இந்த படத்தை அஜித்தின் பிறந்தநாள் அன்று மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது படப்பிடிப்பில் ஏற்படும் தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியில் பாதிப்பு ஏற்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் அஜித் பிப்ரவரி மாதத்தில் விடாமுயற்சி படத்தின் முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

தம்பி விஜய் படத்தை போடுங்க என ஷாக் கொடுத்த தல அஜித்! அப்படி என்ன நடந்திருக்கும்?

பிரம்மாண்ட தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படம் நடிகர் அஜித்தின் வழக்கமான படங்களைப் போல அல்லாமல் சற்று மாறுதலாக காமெடி கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது ஏகே 63 படத்திற்காக ப்ரீ ப்ரோமோஷன் வேலைகளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் அதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் சம்பளம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது அஜித் ஏகே 63 படத்திற்காக 163 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும், இதற்கான முன் பணமாக 25 கோடி அட்வான்ஸ் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களின் பிசினஸ் 250 கோடி அளவில் இருக்கும் பொழுது 163 கோடி அவருக்கு சம்பளமாக பேசி இருப்பது சினிமா வட்டாரங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பளமாக 163 கோடி வாங்குவதற்கான விளக்கமும் கிடைத்துள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் ராசியான நம்பர் என்பது ஒன்று. அந்த கூட்டுத்தொகை வரும் விதமாக நடிகர் அஜித் தற்பொழுது சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.