அதிரடி ஆக்சன் போதும் என முடிவெடுத்த அஜித்! அஜித்தின் 63வது படத்தின் கதை தெரியுமா?

தென்னிந்திய திரை உலகின் மிக துல்லலான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித். , இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இயக்குனர் ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிகர் அஜித் துணிவு படத்தில் நடித்திருப்பார். உண்மை சம்பவமாக அமைந்த வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து துணிவு படத்தின் கதை அமைந்திருக்கும். அதிரடியான பல ஆக்சன் காட்சிகளுடன் இந்த படம் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. துணிவு திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க அஜித்தின் அதிரடியான ஆக்சன் காட்சிகள், விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டு இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அதன் பின் சில மாற்றங்கள் நடைபெற்று தற்போது மகிழ்த்திறுமேனி இயக்கத்தில் தனது 62 ஆவது படத்தில் அஜித் நடித்து வருகிறார். அஜித்தின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நான்கு மாத இடைவேளைக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக துவங்கியது. அஜர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில் நடிகர் அஜித் திரிஷா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்ட படக்குழு மீண்டும் தற்பொழுது படப்பிடப்பில் களமிறங்கியுள்ளது. விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜான் மற்றும் துபாய் நகரங்களில் நடக்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் நடிகை திரிஷா நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

70 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் கிடையே ஆன ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜித் நடிகை திரிஷா அர்ஜுன் இணைந்த மங்காத்தா திரைப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது அது போல் இந்த விடாமுயற்சி திரைப்படமும் அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது 63வது திரைப்படத்திற்காக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 இல் களமிறங்கும் மூன்று விஜய்!

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத் தொடர்ந்து அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். அந்த சமயத்தில் நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அஜித் 63 படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் ஆதிக் ரவிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அஜித்தின் 63வது திரைப்படம் காமெடி கலந்த கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்தை சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் மிகவும் நகைச்சுவை தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் அது படத்திற்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தைப் போல இந்த திரைப்படம் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அடுத்தடுத்த ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் அஜித் இதுபோன்ற காமெடி கலந்த குடும்ப படங்களில் நடிப்பது குடும்ப ரசிகர்களை இருக்கும் விதமாக அமையும் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.