மனைவி சங்கீதா சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த இயக்குனர் படத்தில் நடித்த தளபதி!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. லலித் குமார் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், மைக் மோகன் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி தளபதி விஜய் மற்றும் நடிகர் ஷாருக்கான் வைத்து படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் நண்பன் திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனர் சங்கருடன் இணைந்து ஒரு படத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. அந்த திரைப்படம் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்க இருப்பதாக அதில் நடிக்க தளபதி விஜய் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வாரிசு, லியோ போன்ற கமர்சியல் படங்களில் தளபதி விஜய்யின் நடித்து வந்தாலும் அவ்வபோது தனது அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது, பயிலும் மாணவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருவது என அனைத்து பொது சேவைகளிலும் தளபதி விஜய் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்து சினிமா அரசியல் என பிசியாக இருக்கும் தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் தலைவா. ஏ எல் விஜய் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருப்பார். தலைவா படத்தில் தளபதி விஜய் நடித்த அதற்கான முக்கிய காரணம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

அந்த வகையில் ஏ எல் விஜய் தயாரிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான தெய்வமகள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் தளபதி விஜய்யின் மனைவியான சங்கீதாவுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாகும். அதனால் ஏ எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு திரைப்படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை சங்கீதா தெரிவித்துள்ளார். தனது மனைவியின் ஆசையை புரிந்து கொண்ட தளபதியும் இயக்குனர் ஏ.விஜய் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து தெய்வமகள் படம் குறித்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தது மட்டுமல்லாமல் தங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் விஜய்யிடம் ஏதாவது கதை வச்சிருக்கீங்களா என கேட்டு உள்ளார். அதனை சற்றும் எதிர்பாத்துறாத ஏ எல் விஜய் தலைவா படம் அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால் ஒருவித தயக்கத்துடனே கூறியுள்ளார். ஆனால் விஜய்க்கு கதை பிடித்து விட்டதால் படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார். இப்படி நான் தலைவா படம் உருவாகியது. தலைவா படம் உருவாவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜயின் மனைவி சங்கீதா என்றே கூற வேண்டும். தளபதி விஜய் தன் மனைவியின் விருப்பத்திற்காக படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews