அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதே நேரத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படமும் நேருக்கு நேராக மோதியது. இதை எடுத்து தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்த நிலையில் தற்பொழுது தனது 68வது படத்தில் தளபதி விஜய் பிசியாக நடித்து வருகிறார். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பிரம்மாண்ட அறிவிப்பு வெளியானது. மேலும் அந்த அறிவிப்பில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் துபாயில் அசுர வேகத்தில் நடைபெற்று வந்தது. இதில் நடிகை திரிஷா நடிகை பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் புகழ் ஆரோ கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படத்தில் தல அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளது.

விடுமுறையே இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுக்கமாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் அஜித்திடம் படப்பிடிப்பிற்கு சிறிய இடைவெளி கொடுக்கலாமா என கலந்தாலோசித்து உள்ளார். சிறிய விடுமுறைக்கு பின் முழு ஆற்றலுடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் அதே வேகத்தில் எடுத்து முடிக்கலாம் என கூறியுள்ளார்.

தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்?

மேலும் இந்த இடைவெளியின் பொழுது இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளை இயக்குனர் மீண்டும் போட்டு பார்த்து அதில் ஏதும் தவறுகள் இருப்பின் அந்த காட்சிகளை மீண்டும் படம் ஆக்கலாம் எனவும் கூறியுள்ளார். இந்த கருத்திற்கு நடிகர் அஜித்தும் சம்மதம் தெரிவிக்க துபாயில் நடைபெற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த பட குழுவினர் ஒன்றிணைந்து அஜர்பைஜானில் அடுத்த செடியூல் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. அந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலம் நடக்கும் என்றும் அதை தொடர்ந்து இந்த படத்தின் முழு படப் படிப்புகள் முடிவடைந்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட படக்குழு தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.