விடாமுயற்சி படத்திற்காக உடல் மெலிந்த அஜித்! அவரின் டயட் ரகசியம் தெரியுமா?

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது விடாமுயற்சி திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமணி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். கடந்த மாதம் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அதை தொடர்ந்து அஜர்பைஜானின் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக படப்பிடிப்பிற்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது இரண்டாம் கட்ட ஷெட்யூல் மீண்டும் அஜர்பைஜான் துபாய் போன்ற நகரங்களில் நடந்து வருகிறது. தொடர்ந்து 70 நாட்கள் நடைபெறும் இந்த ஷெடியுல் உடன் படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் புகழ் ஆரவ் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷாவும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் களமிறங்கி நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நான்கு படங்கள் நடித்த நிலையில் ஐந்தாவது முறையாக விடாமுயற்சி படத்தில் ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் கலை இயக்குனர் மிலன் இறந்ததை தொடர்ந்து அந்தப் பணிகளை தற்பொழுது அவரின் மனைவி மற்றும் மகன் பார்த்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் ஒளிப்பதிவாளராக இருந்த நீரவ்ஷா தற்பொழுது விலகி உள்ளதாகவும் அதற்கு பதிலாக அஜித்தின் ஆரம்பம் என்னை அறிந்தால் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஓம் பிரகாஷ் படப்பிடிப்பில் கலந்துள்ளதாகவும் புறப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா அஜித்தின் விடாமுயற்சி படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து எந்த தகவலும் வழியாகவில்லை. இந்த நிலையில் அஜித் விடாமுயற்சி படத்திற்காக உடல் மெலிந்துள்ளதாக பல செய்திகள் வெளியாக இருந்த நிலையில் அவர் டயட் குறித்த சில ரகசியமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய ஆசை?

நடிகர் அஜித் பொதுவாக ஒரு அசைவ பிரியர். தற்பொழுது விடாமுயற்சி படத்திற்காக உடல் மெலிய வேண்டும் என முடிவெடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சைவம் சாப்பிட்டு வருவதை அவர் உடல் மெலிவதற்கு ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் படத்திற்கு தேவையான உடல் எடையை குறைத்தது மட்டுமல்லாமல் மீண்டும் முயற்சித்து எடையை குறைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மிகவும் இளமையான அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடியும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களில் உடல் எடையை குறைப்பது, நரை முடிகளுக்கு ஹேர் கலர் அடிப்பது பல மாற்றங்களை செய்வதை சமீப காலமாக விரும்பவில்லை. தான் இருக்கும் விதத்திலே ரசிகர்களுக்கு படங்களை நடித்துக் கொடுத்து வந்தார். அவரின் வெள்ளை முடி ஹேர் ஸ்டைலும் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் விடாமுயற்சி படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்து தோற்றத்தை மாற்றி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் விடாமுயற்சி படத்தின் மீது ஆர்வத்தை நாளுக்கு நாள் ஏற்படுத்தி வருகிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews