தலக்கு ‘தல’ என்ற பட்டப் பேரு வேண்டாமா..? அஜித்னு கூப்பிட்டா போதுமா..?

நம் தமிழ் சினிமாவில் ஆதி தொட்டு அந்தம் வரை, அப்போ இருந்து இப்போ வர தமிழ் சினிமா துறையில் புகழ்பெற்று கொடிகட்டி பறக்கும் நடிகர்களின் பெயருக்குப் பின்னால் அடைமொழி வைத்துக்கொள்வது என்பது ஒரு பொது வழக்கமாகவே இருந்து வருகிறது.

நம்ம எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், இவங்களும் சரி, இப்பொழுது வந்த சிம்பு,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இவர்களும் தன் பெயருக்குப் பின்னால் அடைமொழிகளை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் வருபவர்களும் தனக்கு புனைபெயர் வைத்துக் கொள்வது தமிழ் சினிமாவின் வழக்கமாகவே உள்ளது.

இருப்பினும் நம் தமிழ் சினிமாவில் இப்பொழுது டாப்பில் உள்ள தல அஜித் குமார் அவர்கள் தன் பெயருக்கு முன்னால் இருக்கும் தல என்ற புனைப்பெயரை வேண்டாம் என்றும் நிராகரித்துள்ளார். தன் ரசிகர்களையும் தன்னை தல என்று கூப்பிட வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டு உள்ளார்.

ஏற்கனவே அஜித்குமார் தன்னை அல்டிமேட் என்று கூறியதையும் நிராகரித்துள்ளார், ரசிகர்களும் அஜித்தை காலப்போக்கில் தல என்றே அன்போடு அழைத்து வந்தார்கள். இந்தநிலையில் அஜித் அவர்களுக்கு தன் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி பெயர்கள் எதுவும் வேண்டாம் என்றும், தன்னை இனிமேல் அடைமொழி வைத்து கூப்பிட வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேண்டுமானால் அவர் தன்னை என் பெயரான அஜித்குமார் மற்றும் ஏ‌கே என்று கூறுமாறு ரசிகர் மத்தியில் மிக பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

அஜித்துக்கு சிவா என்றால் விஜய்க்கு அட்லி! நான்காவது முறையாக இணையும் காம்போ!!

இதுகுறித்து அஜித்தின் மேலாளர், சுரேஷ் சந்திரா தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

“பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டுப் பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோஅல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ, வேறு ஏதாவது பட்டப் பெயர்களையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித் குமார்” என தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.