நேருக்கு நேர் திரைப்படம்.. அஜித் நடித்தாரா..? இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

மணிரத்தினம் தயாரிப்பில் 1997 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியான திரைப்படம் நேருக்கு நேர். இயக்குனர் வசந்த் இயக்கிய இந்த படத்தில் விஜய், சூர்யா, கௌசல்யா, சிம்ரன், ரகுவரன், சாந்தி கிருஷ்ணா, பேபி ஜெனிபர், கரண், விவேக், மணிவண்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

மக்களின் அன்பும், பாசமும் போதும்… இந்த விருது எல்லாம் எனக்கு வேண்டாம்.. கிடைத்த விருதை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!

இந்த படம் சூர்யாவுக்கு முதல் படமாகும். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வெற்றி படமாகவே அமைந்தது. இந்த படத்தின் கதைப்படி சூர்யாவும் விஜய்யும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

விஜயின் அண்ணனும் சூர்யாவின் அக்காவும் திருமணம் செய்து கொண்ட நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து விடுவார்கள். இதனை காரணமாக வைத்து இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் இறுதியில் எப்படி இணைவார்கள் என்பது தான் கதை.

தலைவர் 171வது படத்தில் நடிக்கவில்லை!.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!

இந்த படத்தில் முதலில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அஜித் தான் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு அஜித் இந்த படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். முதல் எட்டு நாள் அஜித்தை வைத்து படப்பிடிப்பை எடுத்துள்ளனர். ஆனால் அதன்பிறகு படப்பிடிப்பிற்கு அஜித்தால் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இயக்குனர் வசந்த் தவித்துக் கொண்டிருந்தபோது மணிரத்தினம் நடிகரை மாற்றுமாறு கூறியுள்ளார். அப்போது இயக்குனர் வசந்த் 8 நாள் படப்பிடிப்பு நடந்து விட்டதே என்ன செய்வது என்று கேட்க, நான் தானே தயாரிப்பாளர் நானே கூறுகிறேன் நடிகரை மாற்றி விடுங்கள்.

ரசிகர்கள் புரிதல் இல்லாமல் நடந்துக்குவாங்க.. வருத்தமாக இருக்கும்.. லாரன்ஸ் பகிர்ந்த தகவல்..!!

புது முகங்களையும் உங்களால் அற்புதமாக பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் புது முகமாக தேடியதில் சூர்யா கிடைத்துள்ளார். அவருக்கு நடிக்க பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.