தலைவர் 171வது படத்தில் நடிக்கவில்லை!.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!

அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில், சம்பளம் வாங்காமல் அயலான் படத்தில் நடித்தேன் எனக்கூறிய சிவகார்த்திகேயன், தலைவர் 171 வது படத்தில் நீங்க நடிக்கிறீங்களா என்கிற கேள்வியை சின்னி ஜெயந்த் முன்வைக்க இல்லை என மறுத்து விட்டார்.

இந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்றும் ரஜினிகாந்தின் மகனே சிவகார்த்திகேயன் தான் என ஏகப்பட்ட உருட்டுகள் உருட்டப்பட்டன. ஆனால் கடைசியில் ரஜினிகாந்தின் மகனாக வசந்த் ரவிதான் படத்தின் மெயின் வில்லனாக நடித்திருந்தார்.

தலைவர் 171ல் நான் இல்லை:

லியோ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்த ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 வது படத்தை இயக்கியுள்ளார். வரும் மார்ச் மாதம் முதல் அந்த படத்திற்கான சூட்டிங் ஆரம்பிக்கும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். ஜெயிலர், வேட்டையன் படங்களைப் போல தலைவர் 1711 வது படமும் மல்டி ஸ்டார் படமாகவே உருவாகும் என்பதையும் ஆனால் எல்சியு கிடையாது என்றும் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறி இருந்தார்.

உடனடியாக தலைவர் 171 வது படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார் என்றும், சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்றும், ஷாருக் கான் ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

ஆனால், தற்போது அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தான் தலைவர் 171 வது படத்தில் நடிக்கவில்லை என்றும் இதுவரை லோகேஷ் கனகராஜ் தன்னை அழைக்கவில்லை நானும் மற்றவர்களை போல செய்திகளில் மட்டும் தான் அதை பார்த்து வருகிறேன் என சொல்லும் போதே சின்னி ஜெயந்த் கூப்பிட்டால் போவீங்களா என்றார். தலைவர் படம் எப்போ கூப்பிட்டாலும் நடிக்க ரெடி சார் என சொல்லி உள்ளார்.

லோகேஷ் இன்னும் கூப்டல:

இதன் மூலம் இதுவரை லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 வது படத்துக்கு சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் லோகேஷ் கனகராஜ் கூடிய விரைவில் எந்தெந்த நடிகர்களை ரஜினிகாந்தின் தலைவர் 171 வது படத்தில் நடிக்க வைக்கப் போகிறார் என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.

நடிகர் அஜித்துடன் பேசிய அனுபவங்களையும் அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். பைக் எடுத்துக்கிட்டு லாங் டிரைவ் போயிருக்கீங்களான்னு அஜித் சார் கேட்டார். உங்க அளவுக்குலாம் இல்லை சார், பக்கத்துல கொஞ்சம் தூரம் போயிருக்கேன் சார் என்றேன். ஒருமுறை அவருடன் பைக் டிராவல் செய்ய வேண்டும் என்றும் ஆசை இருக்கு என்றும் பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.