இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி மிஸ் பண்ணாங்க…? உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

தமிழ் சினிமாக்களை உலகநாயனுக்கு அடுத்தபடியாக அடுத்த பரிணாமத்தில் எடுத்துச் செல்லும் படைப்பாளிகள் வெகு சிலரே. அந்த வகையில் மிஷ்கின், வெற்றி மாறன், பாலா, பார்த்திபன் என இயக்குநர்கள் இருந்தாலும் நாம் கவனிக்கத் தவறியவர்கள் புஷ்கர்-காயத்திரி எனும் இயக்குநர் தம்பதிகள்.

மூன்றே படங்களை இயக்கி கவனிக்க வைத்தவர்கள். ஆர்யாவை வைத்து ஓரம்போ படம் எடுக்க அதன்பின் வந்தவ குவாட்டர் கட்டிங் படத்தை ரசிகர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. விக்ரம் வேதாவில் அனைவரையும் கவனிக்க வைத்த இவர்கள் வ குவார்ட்டர் கட்டிங் படத்தினைச் செதுக்கிய விதம் சற்று வித்தியாசமானது.

Pushkar

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படைப்பா என வியந்து பார்க்க வைத்த படம் அது. தமிழ் மக்களிடையே உலக சினிமா ரசனை மற்றும் சரியான புரிதல் இல்லாத காரணத்தால் இந்த படம் பெரிய வெற்றியை அடையவில்லை. அப்படி என்ன இருக்கு இந்தப் படத்தில் என்று கேட்கிறீர்களா?

Neo-noir black camedy என்ற ஜெனரில் தமிழில் வெளியான சிறந்த படம், இந்தப் படத்தை புரிந்து கொள்ள முதலில் Neo-noir black comedy ஜெனர் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த ஜெனரை அவ்வளவு தனித்துவமாக முழு நிறைவாக கையாண்ட ஒரே ஒரு தமிழ் படம் இந்த படம் மட்டும் தான். இதே பாணியில் வந்தது தான் உலகநாயகனின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும்.

மீண்டும் இணையும் சூர்யா-பாலா கூட்டணி? இயக்குநர் பாலா சொன்ன குட் நியூஸ்

இந்த படத்தில் ஒரு வசனம் வரும்,ஏண்டா எல்லாத்துலயும் மெசேஜ் தேடி அலையுறீங்க? அந்த மாதிரி தான் இந்த ஜெனரும், இந்த ஜெனர் ஒன்றும் சாதாரணமாக படம் எடுக்க கூடிய ஜெனர் அல்ல. மற்ற எல்லா படத்துலயும் கிளைமாக்ஸ் என்ன ஆகும் என யோசிப்போம், ஆனால் இந்தப் படத்தில் கிளைமாக்ஸை நோக்கி எப்படி பயணம் செய்கிறது என யோசிக்க வைக்கும்.

மேலும் அடுத்தடுத்து என்ன ட்விஸ்ட் வரும் என யோசிக்கும் வேளையில் வ குவார்ட்டர் கட்டிங் படத்தில் அடுத்து என்ன கதாபாத்திரம் வரும் என வியப்பில் ஆழ்த்தும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு புதிய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

Story basement, Mood setting, Editing, Character design, Dialogues என அனைத்தும் சிறப்பாக எடுக்கப்பட்ட படம். குறிப்பாக ரெட் மற்றும் கிரீன் கலர் டோன் செட்டிங், டுயல் ரோல் பிலே என ஸ்கீரின்பிலே செய்து அசத்தியிருப்பார்கள் இயக்குனர் தம்பதியினர்.ஒரு அட்டகாசமான திரைக்கதை அமைப்பு கொண்ட படம்.

படத்தில் லாரியில் பயனம் செய்யும் மாணிக்க விநாயகம் ஆறு பாடல்கள் பாடுவார், அனைத்தும் சிவாவின் சூழ்நிலையை விவரிக்கும். படத்தில் வரும் துணை கதாபாத்திரம் அனைத்தும் இரட்டையாக இருக்கும், அல்லது இரண்டு இடங்களில் வரும். உதாரணமாக வெட்டு குத்து, சின்ன அண்ணன், பெரிய தம்பி, இரட்டை நாய்கள், இரட்டை பெண்மணி, இரண்டு ஜான் விஜய் என அனைத்தும் இரண்டாக வரும்.

கன்னாபின்னான்னு இப்படியா Trending ஆகுறது? REELS மழையில் நனையும் பந்தயப் புறா Song

ரெட் அண்ட் கிரீன் டோன் படத்தை உலக தரத்திற்கு கொண்டு சென்றிருக்கும். ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை தனித்தனியே காட்டி பின்னர் அனைத்து காட்சியையும் ஒரே புள்ளியில் இணைத்து அருமையான திரைக்கதை எழுதியிருப்பார்கள்.

வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் / உலக சினிமா அறிவு தமிழ் சினிமா ரசிகர்களிடம் இன்னும் வரவில்லை. ஆனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் படம் நிச்சயமாக கொண்டாடப்படும். முடிஞ்சா நீங்களும் போய் பாருங்க விபரம் புரியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews