அருள்நிதி நெஞ்சுல கைய விட்டு ரத்தத்தை நோண்டி எடுக்கிறதே மிரட்டுதே!.. டிமான்டி காலனி 2 டிரெய்லர் இதோ!

டிமான்டி காலனி 2 டிரெய்லர் ரிலீஸ்:

அருள்நிதியை வைத்து டிமான்டி காலனி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, ராஷி அண்ணா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படமும் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் யாருப்பா இந்த இயக்குனர் இப்படி படம் எடுக்கிறாரே என வியக்க வைத்தது.

ரசிகர்களை மட்டுமின்றி சியான் விக்ரமும் அந்த இரு படங்களையும் பார்த்து வியந்து போனதால் தான் கோப்ரா படத்தை இயக்கும் வாய்ப்பை அஜய் ஞான முத்துவுக்கு கொடுத்தார். இந்த இரண்டு படங்களை விட பெரிய பட்ஜெட்டில் ஏ ஆர் ரகுமான் இசை, வெளிநாடு ஷூட்டிங், கே ஜி எஃப் ஹீரோயின், ஏழு கெட்டப் என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்ற நிலையில் அந்த படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரே வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அஜய் ஞானமுத்துவுக்கு கம்பேக்:

கோப்ரா படத்தின் தோல்வியால் துவண்டு போன அஜய் ஞானமுத்து மீண்டும் கம் பேக் கொடுக்க தனது ஹாரர் ஆயுதமான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள்நிதியை வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சாகர் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன், எம்எஸ் பாஸ்கர், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் நிஜமாகவே பயமுறுத்தும் தொனியில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் தரமான மேக்கிங் உடன் பெரிய பொருட் செலவில் படம் உருவாக்கப்பட்டு இருப்பதை கண்முன் காட்டுகிறது. விரைவில் வெளியாக உள்ள டிமான்டி காலனி 2 திரைப்படம் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்துக்கு வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கிராமத்து படங்களில் நடித்து வந்த அருள்நிதி இந்த ஆண்டு கழுவேத்தி மூர்க்கன் படத்தில் கச்சிதமாக நடித்திருந்தார். மீண்டும் தனக்கு மிகவும் பிடித்த பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். டிமான்டி காலனி முதல் பாகம் அவருக்கு கொடுத்த வெற்றியை இந்த இரண்டாம் பாகமும் மீண்டும் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.