விக்னேஷ் சிவனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனை ஏமாற்றிய அஜித்!

எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்ததாகவும், மேலும் படத்தில் காமெடி நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதன் பின் இந்த படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்தை திருப்தி படுத்தாத பட்சத்தில் இந்த படம் எடுக்கும் முயற்சி அப்படியே கைவிடப்பட்டது.

இதை தொடர்ந்து நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா களமிறங்கி உள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி, சங்கர், பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சிறிய இடைவெளியில் படக்குழு உள்ளது. மீண்டும் இந்த பட குழு டிசம்பர் 4ஆம் தேதி அஜர்பைஜானில் படப்பிடிப்பை தொடர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அசுரவேகத்தில் நடைபெறும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக முடியும் பட்சத்தில் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அல்லது அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 63 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்திய செய்திகள் வெளியாகி வைரலானது.

திருமணத்திற்கு தயாரான அஜித் பட இயக்குனர்! மணப்பெண் யாரு தெரியுமா?

இந்நிலையில் அஜித்தின் 63வது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அஜித் 63 திரைப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்திய திரைப்படமாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வளர்ந்து வரும் இயக்குனர் என்பதால் இந்த படத்தின் பிசினஸில் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் தயாரிப்பு நிறுவனம் இயக்குனரை மாற்றியுள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் அஜித்தின் 63வது திரைப்படத்தை தெலுங்கில் பிரம்மாண்ட நடிகரான பாலகிருஷ்ணாவின் 107 ஆவது திரைப்படமான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளது. பழ மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் சிறப்பான திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.