பொட்டிக்கடை வச்சு பொழைச்சுக்கோ…. கேலி செய்த திரையுலகம்…. தேசிய விருது வாங்கிய இயக்குனர் அகத்தியன்….!!

தமிழ் திரை உலகில் முதல் முதலாக இயக்குனருக்கான தேசிய விருது வாங்கியவர் அகத்தியன் என்பவர் தான். அதன் பிறகு பாலா உள்பட ஒரு சிலர் வாங்கி உள்ளனர். இந்த தேசிய விருதை வாங்குவதற்கு முன் அவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கேலி கிண்டல்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக காதல் கோட்டை என்ற திரைப்படத்தை அவர் இயக்கும்போது அவருக்கு திரையுலகினர்களிடமிருந்து ஏராளமான கேலி கிண்டல் வந்தது.

நீயெல்லாம் எதற்கு இயக்குனராக வந்த, பொட்டி கடை வச்சு பொழைச்சுக்கோ என்றும், மூன்று பொம்பள புள்ள வச்சிருக்க இதெல்லாம் உனக்கு தேவையா என்றும் கிண்டல்கள் வந்தன. ஆனால் தன் முயற்சியில் சற்றும் தளராத இயக்குனர் அகத்தியன் ’காதல் கோட்டை’ என்ற திரைப்படத்தை இயக்கி அந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக ஆக்கியது மட்டுமின்றி தேசிய விருதும் பெற்றார்.

“இருவர் உள்ளம்” வெற்றிக்கதை….. இதில் சிவாஜி அம்மா யார் தெரியுமா…..?

kadhal kottai4

இந்த படத்தின் கதை புறநானூறில் இருந்து எடுக்கப்பட்டது. கோப்பெருந்தேவர் மற்றும் பிசிராந்தையர் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக சந்திக்காமலே நட்புடன் இருந்தனர். கடைசியில் தான் சந்திப்பார்கள். இதை அப்படியே காதலர்களாக மாற்றினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்ததன் விளைவுதான் அகத்தியனுக்கு காதல் கோட்டை கதை தோன்றியது.

இந்த கதையை அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் கூறியபோது காதலனும் காதலியும் படத்தின் ஆரம்பத்திலிருந்து சந்தித்து காதல் செய்தாலே படம் ஓடல. இதுல சந்திக்காமலே ஒரு காதல் கதையா என பலரும் நிராகரித்துள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் இந்த கதையை கூறியபோது வித்தியாசமாக இருக்கிறது, அதேபோல் காட்சிகளும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்.

kadhal kottai1

வான்மதி படத்தை இயக்கிய போது அஜித் உடன் நல்ல பழக்கம் என்பதால் இந்த படத்தின் நாயகன் கேரக்டருக்கு அஜித்தை தேர்வு செய்தார் அகத்தியன். இந்த படத்தில் ஒரு குடும்பப் பெண்மணி, அதே நேரத்தில் சிடுசிடுவென்று கோவப்படும் கேரக்டர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த அகத்தியன், ஒரு நிகழ்ச்சியில் அம்மாவை சிடுசிடுவென பேசிய தேவயானியை பார்த்ததும் அவர்தான் இந்த படத்தின் நாயகி என்பதை முடிவு செய்தார்.

பாண்டியராஜனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள சில ஒற்றுமைகள்.. இதை கவனிச்சீங்களா?

அதேபோல் தலைவாசல் விஜய், கிரண், ஹீரா ஆகியோர்களும் இந்த படத்தில் இணைந்தனர். இந்த படத்திற்கு இசையமைக்க தேவா ஒப்பந்தம் செய்யப்பட. அவரது இசையில் உருவான வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, நலம் நலம் அறிய ஆவல், கவலைப்படாதே சகோதரா ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் கதைப்படி அஜித் மற்றும் தேவயானி ஆகிய இருவரும் பார்க்காமலே ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள்.

kadhal kottai

இருவரும் இறுதியில் எப்படி இணைந்தார்கள் என்பது தான் மீதி கதை.  இந்த படம் வெளியான போது சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் அகத்தியன் முதல் நாள் முதல் காட்சியை படம் பார்த்தார். படம் பார்த்தவர்கள் மத்தியில் எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லை என்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் படம் கிளைமாக்ஸ் காட்சியை நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் கேட்டது.

அதன் பிறகு தான் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது. படம் முடிந்து ரசிகர்கள் வெளியே செல்லும்போது இயக்குனரை பலர் பாராட்டினர்.  முதன்முதலாக அஜித் நடித்த படத்தில் இயக்குனருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டு கிடைத்தது. அதன் பிறகு படம் சூப்பர் ஹிட் ஆனதோடு தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் அகத்தியனுக்கு கிடைத்தது.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

அதன் பிறகு தான் அகத்தியனை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் கப்சிப் என்று வாயை மூடினார்கள். இந்த ஒரு படத்தால் அவருக்கு இன்றும் திரையுலகில் மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...