நடிக்க ஆரம்பித்ததும் கிடைச்ச பாலச்சந்தர் பட வாய்ப்பு.. ரஜினியின் தங்கை கேரக்டர் வரை உயர்ந்தது எப்படி..

பெரிய திரையில் முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு பலருக்கும் அத்தனை எளிதில் கிடைத்து விடாது. அப்படி பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் நடித்து சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை யுவராணி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் உள்ள படங்களில் நடித்து பிரபலமான இவர், தம்பி ஊருக்கு புதுசு என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்த போது யுவராணிக்கு வெறும் 17 வயது தான். அப்படி இருக்கையில், அடுத்த படத்திலேயே கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அழகன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் யுவராணிக்கு கிடைத்திருந்தது.

yuvarani2

இந்த இரண்டு படங்களால் கிடைத்த வெற்றியின் காரணமாக அவருக்கு மீண்டும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ஜாதிமல்லி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் குஷ்பு நாயகியாக நடித்திருக்க, இரண்டாவது நாயகியாக யுவராணி நடித்திருந்தார். இதனை அடுத்து அவர் சில தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வந்தார்.

விஜயகாந்த் மற்றும் விஜய் இணைந்து நடித்த செந்தூரபாண்டி என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அவர் விஜய்யுடன் கபடி விளையாடும் காட்சியில் கிளாமராக நடித்திருப்பார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதுவும் பெரிய வெற்றி பெற, பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான டூயட், ராம்கி நடித்த சின்ன மேடம், ஜெயராம் நடித்த நிலா ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா என்ற திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருப்பார். இந்த கேரக்டர் அவரை இன்னும் பரவலாக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதேபோல் பாரதிராஜா இயக்கத்தில் உருவான பசும்பொன் படத்தில் அவர் தேன்மொழி என்ற கேரக்டரில் சூப்பராக நடித்திருப்பார்.

நடிகை யுவராணிக்கு தொடர்ச்சியான வெற்றி படங்கள் கிடைத்த நிலையில் தான் அர்ஜுன் நடித்த கர்ணா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் சக்தி, அடுத்த ஆட்டம், உள்ளம் கொள்ளை போகுதே, பார்த்தாலே பரவசம், கோட்டை மாரியம்மன், சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் நடித்தார். இதன் பின்னர் அவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார்.

yuvarani1

ஆசை ஆசையாய், சிலம்பாட்டம், ஜெகன் மோகினி, தம்பிக்கு இந்த ஊரு, சிங்கம் போன்ற படங்களில்  நடித்த அவர் ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ’பாஹீரா’ என்ற திரைப்படத்திலும் ஸ்வப்னா என்ற கேரக்டரில் யுவராணி நடித்தார்.

பெரிய திரையில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் நடிகை யுவராணி தனது நடிப்பு முத்திரை பதித்துள்ளார். முதன் முதலாக அவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான காதல் பகடை என்ற சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்தார். இதனை அடுத்து சித்தி, கல்யாணம், தென்றல், மாமியார் தேவை, மன்னன் மகள், பாசமலர், லட்சுமி கல்யாணம் போன்ற பல சீரியல்களில் நடித்தார். கடந்த 2000 ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்ற சீரியலில் கமலா சுந்தரமூர்த்தி என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார்.

நடிகை யுவராணி கலந்த 2000 ஆண்டு ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் அவர் தொடர்ச்சியாக பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews