காலையில் காதல், மாலையில் திருமணம்.. கமலுக்கு தங்கை, ரஜினிக்கு மகளாக நடித்த நடிகையின் வாழ்க்கைப்பாதை..!

கமலஹாசனுக்கு தங்கையாகவும் ரஜினிகாந்துக்கு மகளாகவும் நடித்த நடிகை ஒருவர் இயக்குனர் தன்னிடம் காலையில் காதலை தெரிவித்த நிலையில் மாலையில் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டது திரையுலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் முக்கிய கேரக்டரில் நடித்து பிறகு அம்மா வேடம் வரை நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை துளசி. கர்நாடகாவை சேர்ந்த இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

இதனை அடுத்து தெலுங்கில் முக்கிய கேரக்டர்களில், தங்கை, மகள் போன்ற கேரக்டரில் நடித்தார். இவரது நடிப்புக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது.

கடந்த 1982ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சகலகலா வல்லவன் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். இவரது கேரக்டர் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

kamal tulasi

அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான நல்லவனுக்கு நல்லவன் என்ற கேரக்டரில் ரஜினியின் மகளாகவும், கார்த்திக்கின் காதலியாகவும் நடித்திருப்பார். கமல்ஹாசன், ரஜினி மட்டுமின்றி பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

படம் வெளியான மூன்றே நாளில் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்.. ‘வசந்த மாளிகை’ படத்தின் அறியாத தகவல்..!

tulasi rajini

இந்த நிலையில் தான் பிரபல கன்னட இயக்குனர் சிவமணி என்பவர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சாய்பாபாவின் பக்தை என்ற காரணத்தினால் அவர் மீது சிவமணிக்கு தனி ஈர்ப்பு ஏற்பட்டது. ஒரு நாள் படப்பிடிப்பின் போது நான் உன்னை காதலிக்கிறேன் என்று இயக்குனர் சிவமணி சொன்ன நிலையில் அவரை ஏற்கனவே முழுமையாக தெரிந்து வைத்திருந்த துளசி உடனே திருமணத்திற்கு சம்மதித்தார். இருவரும் அன்று மாலையே கோவிலில் சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில வாரங்கள் கழித்து தான் இரு வீட்டாருக்கும் இந்த திருமணம் தெரிய வந்ததை அடுத்து இருவீட்டாரும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சாய் தருண் என்ற அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் இயக்குனராக உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து முற்றிலும் நடிப்பதை நிறுத்திவிட்ட துளசி நீண்ட இடைவேளைக்கு பின்னர்  ஒரு சில படங்களில் அம்மா கேரக்டரில் நடிக்க வந்தார்.

குறிப்பாக விஷாலின் ‘ஆம்பள’, சசிகுமாரின் ‘ஈசன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் ‘போலோ சங்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி – கமல் இணைந்து நடித்த கடைசி படம்.. நினைத்தாலே இனிக்கும் ஒரு இசைக்கவிதை!

கடந்த ஆண்டு வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் அவர் துர்கா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு நாயகியாகி அதன் பிறகு திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎண்ட்ரி ஆன துளசி தற்போதும் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...