முதல் ரெண்டு படத்துல விஜய், அஜித் கூட நடிச்ச நடிகை.. ஆனாலும் ஒரே காரணத்தால் நடிப்பதை நிறுத்திய பிரபலம்..

அஜித், விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது திரை உலகிற்கு வரும் பல நடிகைகளின் கனவாக இருக்கிறது. நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என இருவருடனும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், ஒரு பிரபல நடிகை முதல் இரண்டு படங்களிலேயே விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். அவர் தான் நடிகை ஸ்வாதி.

மிகவும் மாஸாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்வாதி, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நிலையில் அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு திரையுலகில் நடிக்க தொடங்கினார். முதல் படமே அவருக்கு விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடிப்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’தேவா’ என்ற திரைப்படத்தில் தான் அவர் நாயகியாக பாரதி என்ற கேரக்டரில் அறிமுகமானார்.

swathi1

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது இரண்டாவது தமிழ் படமே அஜித் நடித்த ’வான்மதி’ என்ற படம் தான். இதனையடுத்து கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ஸ்வாதி தமிழில் தான் அதிக கவனம் செலுத்தினார். மூன்றாவது படம் தமிழில் அவர் நடித்தது மீண்டும் விஜய்யுடன் ’வசந்த வாசல்’ என்ற படத்தில் தான். அதன் பிறகு  சரவணன் நடித்த ’விசுவநாத்’ விஜய் நடித்த ’செல்வா’ பிரபு நடித்த ’மாப்பிள்ளை கவுண்டர்’, செல்வா நடித்த ’நாட்டுப்புற நாயகன்’ கார்த்திக் நடித்த ’சுந்தரபாண்டியன்’ போன்ற படங்களில் நடித்தார்.

அருண் விஜய் நடித்த ’துள்ளித் திரிந்த காலம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர் ராமராஜன் நடித்த ’அண்ணன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் ஸ்வாதி. அதன் பிறகு பார்த்திபன் நடித்த ’ஹவுஸ்புல்’, அருண்பாண்டியன் மற்றும் நெப்போலியன் இணைந்து நடித்த ’சிவன்’, அஜித் நடித்த ’உன்னை தேடி’ போன்ற படங்களில் நடித்தார். இது தவிர சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோரின் திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

சில ஆண்டுகள் மேற்படிப்புக்காக சினிமாவிற்கு இடைவெளி விட்ட ஸ்வாதி, அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு அமீர் நடித்த ’யோகி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். அது தான் அவரது திரை பயணத்தில் கடைசி படமாகவும் உள்ளது.

நடிகை ஸ்வாதி தொழிலதிபர் கிரண் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்த போதிலும் அவர் நடிக்க மறுத்து விட்டு முழுவதும்  குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews