ஸ்ருதிஹாசன் இப்படி ஒரு பழக்கத்துக்கு அடிமையானவரா? பேட்டியில் உளறிக் கொட்டிய ஸ்ருதி

உலக நாயகனின் வாரிசான ஸ்ருதி ஹாசன் தந்தையைப் போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடல் என சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் தந்தையைப் போல் கலக்கி வருகிறார். தமிழில் உன்னைப் போல் ஒருவன் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன் குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், விஷால் எனவும், தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து இந்திய நடிகைகள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கே.ஜி.எப். புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடித்துள்ள சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசும் போது,“என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாள்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன். ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாள்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.“ என்று வெளிப்படையாக பேசினார்.

காமெடிப் படம் தான்: ஆனா காட்சிக்குக் காட்சி இப்படி ஒரு கருத்தா? 1941-ல் வியக்க வைத்த தமிழ்ப்படம்

ஒரு நடிகை வெளிப்படையாக தான் மதுவிற்கு அடிமையாகி இருந்ததையும், அதிலிருந்து மீண்டதையும் தனது மார்க்கெட் பற்றி கவலைப் படாமல் பொது வெளியில் ஸ்ருதிஹாசன் பேசியது அவரது தைரியத்தைப் பாராட்டுவதாக இருந்தாலும், அவரை சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

கமல்ஹாசனும் மகள் ஸ்ருதியின் இந்த பேட்டிக்கு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சினிமாவில் இது போன்று நடப்பது சாதாரணமானது தான் என்றாலும் குடியால் வாழ்க்கையைத் தொலைத்த நடிகர்கள் ஏராளம் என்பது ஸ்ருதிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

நடிகர்கள் தங்களது கடந்த காலத்தின் இருட்டு பக்கங்களை வெளியில் சொல்லத் தயங்கும் வேளையில் ஸ்ருதிஹாசன் பேட்டியில் தனது மதுவுக்கு அடிமையாகி மீண்டு வந்தது பற்றிக் குறிப்பிட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்ருதியின் ஸ்ருதி குறையாமல் இருந்தால் சரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.