வௌவௌத்துப் போன ராஷ்மிகா.. AI அட்டூழியத்தால் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து நமது வேலைகளை சுலபமாக்குகிறதோ அந்த அளவிற்கு தீமைகளும் பெருகி வருகிறது. தற்போது AI தொழில்நுட்பம் பிரபலங்களைப் பாடாய்படுத்த நடிகை ராஷ்மிகாவிற்கு நடந்த கொடூரம் உச்சகட்டம் என்றே சொல்லலாம்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக இறந்தவர்களைக் கூட கண்முன் கொண்டுவரும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. சினிமா, அரசியல், கிரிக்கெட் என பலதுறைப் பிரபலங்களை AI தொழில்நுட்பம் கொண்டு பல்வேறு கோணங்களில் சித்தரித்து  அவ்வப்போது இணையதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவருகின்றன.

இதில் நடிகை ராஷ்மிகாவின் போன்று DEEP FAKE EDIT-ல் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து அதிர்ச்சியான நடிகை ராஷ்மிகா தற்போது சமூக வலைதளங்களில் தனது கண்டனத்தை வருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

Amithab

மேடையிலேயே எம்.ஜி.ஆரை விமர்சித்த டைரக்டர்.. கைதட்டி ரசித்த எம்.ஜி.ஆர்.. இவர்தான் அந்த டைரக்டரா?

அதீத கவர்ச்சியாக இருக்கும் அந்த வீடியோவைப் பற்றி அவர் கூறும் போது, ’‘இந்த வீடியோ குறித்து பேசவே வருத்தமாக உள்ளது. தொழில்நுட்பத்தை இப்படி தவறாக பயன்படுத்துவதைப் பார்த்தால் பயமாக உள்ளது எனவும், என்னுடைய பள்ளி, கல்லூரிக் காலங்களில் இதுபோன்று நடந்திருந்தால் எப்படி சமாளித்திருப்பேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனவும் கூறியிருக்கிறார். மேலும் அவர் இது போன்று பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

ராஷ்மிகாவின் இந்த வீடியோவை அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் ஷேர் செய்து தங்களின் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர். உண்மையில் ராஷ்மிகா போன்று தோற்றமளிக்கும் அந்த வீடியோவில் வருவது இன்ஸ்டாகிராம் மாடல் அழகி ஒருவருடயைதாகும். நெட்டிசன் யாரோ ஒருவர் ராஷ்மிகா போன்று அதை AI மூலம் சோஷியல் மீடியாக்களில் பரவ விட அதிர்ச்சியில் உறைந்தனர் ராஷ்மிகாவின் ரசிகர்கள்.

அண்மையில் இது போன்ற காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனத்தை சிம்ரன் ஆடுவது போல் AI மூலம் சித்தரித்தது போன்ற சம்பவங்களால் திரையுலகம் ஆடிப் போயிருக்கிறது. இவ்வாறு சென்றால் இதற்கு முடிவே இல்லையா எனவும், விரைவில் நடவடிக்கை தேவை எனவும் திரையுலகினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews