மார்வெல் படங்களுக்கு பொருத்தமானவர் விஜய்… சமந்தா பதிலால் தளபதி ரசிகர்கள் குஷி!

ஃபேண்டஸி படங்களை தயாரிக்கும் நிறுவனம் ‘மார்வெல் எண்டர்டெயின்மெண்ட்’ நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டது. ஸ்பைடர்மேன், எக்ஸ்மேன், டெட்பூல், அவென்ஜர்ஸ் போன்ற எண்ணற்ற சூப்பர் ஹீரோ படங்களின் மையம் மார்வெல். இதில் உருவாகும் படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் இந்த சூப்பர் ஹீரோ படங்களை விரும்புகின்றனர்.

‘மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்’-ஐ மையமாக வைத்து பல படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது, ஒரு சில சமயங்களில் முக்கியமான கேரக்டர்களில் சூப்பர் ஹீரோக்கள் வந்து போவது எனப் பல மார்வெல் தயாரிப்புகள் மக்களை ஈர்த்து வருகிறது.

brie larson

இந்நிலையில், நவம்பர் 10ம் தேதி ‘தி மார்வெல்ஸ்’ சூப்பர் ஹீரோக்களாக, நடிகைகள் நடித்து வெளிவர இருக்கிறது. இதில் முக்கிய கேரக்டரில் கொரியன் தொடர்களில் பிரபலமான பார்க் சோ ஜூன் நடித்துள்ளார். பிரி லார்சன் சூப்பர் ஹீரோவாக கலக்கும் இந்த படம் தீபாவளி கொண்டாட்டமாக இந்தியாவில் வெளியாக உள்ளது.

மார்வெல் படங்களை இந்தியாவில் விளம்பரப்படுத்த அந்நிறுவனம் நடிகை சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுகிறது. 2019ல் வெளியான ‘கேப்டன் மார்வெல்’ படத்தை சமந்தா புரோமோட் செய்தார். அதே போல், தற்போது வெளியாக உள்ள ‘தி மார்வெல்ஸ்’ படத்தையும் சமந்தா புரோமோட் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.

அதற்கான நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மார்வெல் ஹீரோக்கள் போல உடையணிந்து வந்தர்களுடன் நின்று, சூப்பர் ஹீரோ படங்களுக்கு தான் தீவிர ரசிகை என்பதை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து அவரிடம் சினிமா குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன அதற்கு பதில் அளித்தார்.

அப்போது, இந்திய சினிமாவில் இருந்து யார் மார்வெல் படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா அளித்த பதில், அல்லு அர்ஜூன், விஜய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் மற்றும் பலர் பொருத்தமாக இருப்பார்கள் என்பதாகும். இது தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் குஷி படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews