கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஜெமினி கணேசனுடன் குடும்பம் நடத்திய நடிகை.. அவங்க மகளும் பிரபல நடிகை தானா..

சினிமாவில் பல படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக காதல் காட்சிகளில் கலக்கி இருந்த மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நிஜ வாழ்க்கையிலும் காதல் ததும்ப ததும்ப வாழ்ந்தது பற்றிய தகவல் பலரும் அறிந்ததே. பிரபல நடிகை சாவித்திரியை காதலித்து அவருடன் ஜெமினி கணேசன் இணைந்து வாழ்ந்திருந்த விஷயம், அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

இதனிடையே, ஜெமினி கணேசனுடன் இணைந்து வாழ்ந்த மற்ற ஒரு நடிகையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். நடிகை புஷ்பவல்லி தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருந்த சூழலில், குழந்தை சீதாவாக நடித்து அதிக பிரபலம் அடைந்திருந்தார். இதனையடுத்து சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அவர் தொடர்ந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு வளர்ந்து குமரியான பின்னர் அவர் பல தெலுங்கு படங்களில் நடித்தார். அவர் நாயகியாக நடித்த ’பால நாகம்மா’ என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

pushpavalli 1

இந்த நிலையில் தான் அவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘தாசி அபராஞ்சி’ என்ற திரைப்படத்தில் அவர் அபராஞ்சி என்ற கேரக்டரில் நடித்தார். இதனையடுத்து அவர் ’மிஸ் மாலினி’ ’சக்கரதாரி’ ’சம்சாரம்’ ’வேலைக்காரி மகள்’ ’பக்த மார்க்கண்டேயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

என்டி ராமராவ், சிவாஜி கணேசன் நடித்த சம்பூர்வ ராமாயணம் என்ற தமிழ் படத்தில் இவர் கௌசல்யா கேரக்டரில் நடித்திருந்தார்.

புஷ்பவல்லி நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருந்ததால் அவரும் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற பெயர் எடுத்தார். 1936 ஆம் ஆண்டு தனது குழந்தை பருவத்தில் நடிப்புத் தொழிலில் இறங்கியவர், 1969 ஆம் ஆண்டு வரை சுமார் 30-க்கும் மேற்பட்ட வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் இவர் ஜெமினி கணேசன், தேவிகா நடித்த ’வாழ்க்கை படகு’ என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்தார். நடிகை புஷ்பவல்லி கடந்த 1940 ஆம் ஆண்டு ரங்காச்சாரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 1946 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார். இதனை அடுத்து அவர் ஜெமினி கணேசனுடன் இணைந்து வாழ்க்கை நடத்தியதாகவும் பிரபல ஹிந்தி நடிகை ரேகா இந்த தம்பதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புஷ்பவல்லி கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 65 வது வயதில் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews