அதென்ன ‘நல்லெண்ணய்‘ சித்ரா… இப்படியும் பட்டப் பெயருடன் ஒரு நடிகையா?

மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி என்று ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களுக்கு பட்டம் சூட்டி அடைமொழியுடன் அழைத்து வருவது சினிமாவின் எழுதப்படாத விதி. அதேபோல கன்னடத்துப் பைங்கிளி, நடிகையர் திலகம், புன்னகை அரிசி, நாட்டியப் பேரொளி என்று இப்போதுள்ள லேடி சூப்பர் ஸ்டார் வரையில் பட்டங்கள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் நல்லெண்ணெய் என்ற அடைமொழியுடன் நடிகை ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் சித்ரா. கேரளாவைச் சேர்ந்த சித்ரா மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் சில 18+ படங்களிலும் நடித்தார். பின்னர் அதிலிருந்து விடுபட்டு தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க தமிழ் சினிமா அவரை வாரிக் கொண்டது.

அதன்பின் ரசிகன் ஒரு ரசிகை என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் சுகாசினியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் தான் அவர் நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்தார்.அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு “நல்லெண்ணெய்” சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது.

மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன் : இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்துச்சா?

இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
குறிப்பாக மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இவர் நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் பிரபு நடித்த என் தங்கச்சி படிச்சவ, ராம்கி நடித்த வெள்ளைய தேவன் ஆகிய படங்களில் நடித்த சித்ரா அதன்பின் சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார்.

திருமணத்திற்குப் பின் குடும்பத் தலைவியாக வாழ்க்கையை நடத்தியவர் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். எதிர்பாரா விதமாக 2021-ல் மாரடைப்பால் உயிரிழந்தார் சித்ரா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews