ஹீரோயின் மட்டுமில்ல.. எல்லா ஏரியாலயும் தூள் கிளப்பிய நடிகை.. தொட்டதெல்லாம் ஹிட்டு தான்..

சினிமாவில் ஒரு தொழிலில் ஈடுபடும் பலரும் அதில் மட்டும் தான் அதிக கவனம் செலுத்தி முன்னணியாக மாறவும் செய்வார்கள். அதே வேளையில், சிலர் மட்டும் நடிப்பு, இசையமைப்பாளர், இயக்கம், பாடகர் என பன்முக திறமை கொண்டும் விளங்குவார்கள். அதிலும் நடிகைகளாக இருக்கும் பலரும் அரிதாகவே வேறு பக்கம் கவனம் செலுத்த விரும்புவார்கள்.

அந்த வகையில் மிக முக்கியமான நடிகை தான் ரோகிணி. இயக்குனர், பாடல் ஆசிரியர், பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள ரோகிணி, ஆந்திராவைச் சேர்ந்தவர். இருந்தாலும் சிறு வயதிலிருந்து தமிழ்நாட்டில் தான் படித்து வளர்ந்தார். சிறு வயதிலேயே இவர் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பல படங்களில் நடிப்பது மட்டுமின்றி மற்ற பணிகளையும் மிக கூர்ந்து கவனித்தும் வந்தார்.

ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த ரோகிணி, பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’நிழல்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சுமை, பார்வையின் மறுபக்கம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் உள்பட பல படங்களில் கடந்த 1980-களில் நடித்தார்.

rohini2

90 களில் அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்தார். தந்துவிட்டேன் என்னை, ரெண்டு பொண்டாட்டி காவல்காரன், அபிராமி, நட்சத்திர நாயகன், மறுபடியும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அம்மா அக்கா வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

விருமாண்டி படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்த ரோகிணியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் அந்த சமயத்தில் பேசப்பட்டிருந்தது. அதேபோல் அய்யா, தாமிரபரணி, வாமனன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தற்போதும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மற்றும் பாடல் ஆசிரியராகவும் ரோகிணி இருந்துள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம், வில்லு, முன்தினம் பார்த்தேனே உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன சின்ன ஆசை மற்றும் ஒரு டாக்குமென்டரி படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.

rohini1

அதுமட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களுக்கு அவர் டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகைகளுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார். தமிழில் ஐஸ்வர்யா, மதுபாலா, வினிதா, மனிஷா கொய்ராலா, நக்மா, உள்ளிட்ட பலருக்கும் அவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

இதே போல, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள ரோகிணி, ஒரு வெப் தொடரிலும் கூட நடித்துள்ளார். திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் அவர் பணிபுரிந்துள்ள நிலையில் நடிகை ரகுவரனை அவர் கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் ரகுவரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.