2 திருமணங்களும் தோல்வி.. அப்பா-மகனுக்கு ஒரே நேரத்தில் ஜோடி.. அம்பிகாவின் அறியப்படாத தகவல்..!

தமிழ் திரை உலகில் ஒரே ஆண்டில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. ஒரு நாள் அப்பாவுடன் ஜோடியாகவும் அடுத்த நாள் மகனுடன் ஜோடியாகவும் அவர் நடித்ததாக பேட்டியில் கூட தெரிவித்துள்ளார். அந்த அப்பா, மகன் நடிகர்கள் தான் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு என்பதும், இந்த இருவருக்கும் ஜோடியாக நடித்த நடிகை தான் அம்பிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவை சேர்ந்த அம்பிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் சில படங்கள் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹீரோயினியாகவும் பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

2 திருமணங்களும் தோல்வி.. அப்பா-மகனுக்கு ஒரே நேரத்தில் ஜோடி.. அம்பிகாவின் அறியப்படாத தகவல்..!

ஆரம்ப காலத்தில் தமிழில் சில படங்கள்  நடித்திருந்தாலும் பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ambika1

குறிப்பாக ’கடல் மீன்கள்’, ’தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ’சகலகலா வல்லவன்’, ’எங்கேயோ கேட்ட குரல்’, ’வாழ்வே மாயம்’ ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பில் வெளியான வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்கும் நிலை ஏற்பட்டது. ’வெள்ளை ரோஜா’ மற்றும் ’திருப்பம்’ ஆகிய திரைப்படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த அதே ஆண்டில் ’வாழ்க்கை’ என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட அடுத்தடுத்து சில மாதங்களில் வெளியானது என்பதும் இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் ஒரு நாள் அப்பாவுக்கு ஜோடி, ஒருநாள் மகனுக்கு ஜோடி என நடிப்பது குறித்து பத்திரிகை பேட்டியில் புலம்பியதாகவும் கூறப்பட்டது.

கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?

ஆனால் அதனை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள்தான் கிடைத்தது. குறிப்பாக கமல்ஹாசனுடன் ’காக்கிச்சட்டை’, ரஜினியுடன் ’நான் சிகப்பு மனிதன்’, மீண்டும் கமல்ஹாசனுடன் ’உயர்ந்த உள்ளம்’ போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தன. மேலும் ’படிக்காதவன்’, மிஸ்டர் பாரத்’, ’விக்ரம்’, ’நானும் ஒரு தொழிலாளி’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ambika

இந்த நிலையில் நடிகை அம்பிகா கடந்த 1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு என்பதும் அவர்கள் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் ஆகி 8 ஆண்டுகளில் அதாவது 1996ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார் அம்பிகா. அதன் பிறகு அவர் நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்தார். 2002ல் திருமணம் செய்து கொண்டாலும் இரண்டே ஆண்டுகளில் இந்த திருமணமும் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக அவர் தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜியைப் பாராட்டிய கிருபானந்தவாரியார்… என்ன சொன்னார்னு தெரியுமா?

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அம்பிகா சமீபத்தில் கூட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் தற்போது அவர் ’மலர்’ என்ற சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews