திருமணமாகி குழந்தை பிறந்த பின் நடிகைக்கு மலர்ந்த காதல்.. விபரீத முடிவை காதலன் எடுப்பதற்கு முன் நடந்த பரபர சம்பவம்

தமிழ் திரை உலகில் கிளாமர் கேரக்டர்களில் நடித்த பல கதாநாயகிகள் உள்ளனர். அவர்கள் திரைப்படங்களில் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்களையும் கூட கடந்து வந்திருப்பார்கள். அந்த வகையில், பல படங்களில் நடித்த நடிகை அல்போன்சாவை பற்றி தற்போது பார்க்கலாம்.

நடிகை அல்போன்சா பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் மற்றும் கிளாமர் கேரக்டர்களில் நடித்து வந்தார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் இடம்பெற்ற ராராரா ராமையா என்ற பாடலில் தான் முதலில் அவர் அறிமுகமானார்.

அதன் பிறகு சரத்குமார் நடித்த நாடோடி மன்னன், விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், நாகார்ஜுனா நடித்த ரட்சகன் உட்பட பல திரைப்படங்களில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் சுமார் 50 படங்களுக்கு மேல் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியுள்ளார்.

நடிகை அல்போன்சா கடந்த 2001 ஆம் ஆண்டு பருவமழை என்ற திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு இருந்ததாகவும் இருப்பினும் காதலித்தவரை திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக அவர் அந்த திருமணத்தை செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியே வாழ்ந்து வந்தார்.

நடிகை அல்போன்சாவின் சகோதரர் தான் நடன இயக்குனர் ராபர்ட். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே. நடன இயக்குனர் ராபர்ட்டின் நண்பரான வினோத்குமார் என்பவருடன் அல்போன்சாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றிருந்த அல்போன்சா, வினோத்குமாரை திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டதால் பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் வினோத்மாரின் பெற்றோர் அவருக்கு திருமணம் நடத்த முடிவு செய்தபோது அவர் அல்போன்சாவிடம் நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவசரப்படுத்தியுள்ளார். ஆனால் அல்போன்சா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டால் சட்ட சிக்கல் ஏற்படும் என்றும் அதனால் கொஞ்சம் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதன் பெயரில் உருவான பிரச்சனையில் வினோத்குமார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் வினோத்குமாரின் பெற்றோர் அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் ஆகிய இருவரும் தான் தங்கள் மகனை கொலை செய்து விட்டதாக புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி அல்போன்சாவிடம் வினோத்குமாரின் பெற்றோர்கள் சண்டை போட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து மனமுடைந்த அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அவர் தனது உறவினர்களால் காப்பாற்றப்பட்டார்.

அதே போல, விபரீத முடிவை வினோத் குமார் எடுப்பதற்கு முன்பு வரை கூட தனது அழகை வினோத் குமார் வர்ணித்து கொண்டிருந்ததாகவும் அந்த சமயத்தில் அல்போன்சா குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர், அல்போன்சாவால் திரையுலகில் கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்த நிலையில் அதன்பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கலால் அவர் திரையுலக வாய்ப்புகளை இழந்தார் என்பது தான் உண்மையாகவும் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...