தம்பியுடன் ஜோடி சேர்ந்தாச்சு.. அடுத்து அண்ணணுக்குத்தான்.. சூர்யா ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. வெளியான ரகசிய அப்டேட்

இயக்குநர் ஷங்கரின் மகளும், தமிழில் வளர்ந்து வரும் நடிகையுமான அதிதி ஷங்கர் தற்போது சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதிதி ஷங்கர் தனது முதல்படமான விருமனில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். முத்தையா இயக்கிய இப்படத்தினை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்தியுடன் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் யுவனின் இசையில் அமைந்த இப்படத்தில் பாடல் ஒன்றையும் பாடியிருந்தார் அதிதி.

டைரக்டர் ஷங்கரோ தனது மகளை டாக்டருக்குப் படிக்க வைத்து விட்டு மருத்துவர் ஆவார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென சினிமா பக்கம் திரும்பினார் அதிதி. விருமன் பட வெற்றிக்குப் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இப்படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருந்தார். பின் சக்தி மசாலா உள்ளிட்ட விளம்பரப் படங்களில் பாடியும், நடித்தும் இருந்தார்.

தற்போது அதர்வாவின் சகோதரர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இந்நிலையில் இவர் அண்மையில் இன்ஸ்டாவில் டாக்டராக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இனி அதிதி நடிக்கப் போவதில்லை என்ற செய்திகள் பரவ ஆரம்பித்தது.

மொட்டை அடிச்சு காலை உடைச்சுட்டு நடந்தா நடிப்பா..? சீயான் விக்ரமை வம்புக்கு இழுத்த இயக்குநர்

தற்போது இதற்கு முடிச்சுப் போடும் விதமாக சூர்யாவுடன் இணைந்துள்ளார் அதிதி ஷங்கர். தற்போது சூர்யா கங்குவா, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன்பின் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூரரைப் போற்று வெற்றிக்குப் பின் மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் இணையும் இந்தக் கூட்டணியில் தற்போது அதிதி ஷங்கரும் இணைந்துள்ளார். தமிழ்நாட்டில் 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்கருவாக வைத்து உருவாகும் புறநானூறு படம் பீரியட் படமாக உருவாகிறது. துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews