புரோட்டா மாஸ்டரான பிரபல ஹீரோ.. பட வாய்ப்புகள் இல்லாதால் நடிகர் எடுத்த திடீர் முடிவு

சாட்டை படத்தை இன்றைய 2K கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். கிராமத்து அரசுப் பள்ளியின் அவல நிலையையும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மெத்தனப் போக்கையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய படைப்பு அது. சமுத்திரக்கனி, தம்பி ராமைய, ஜூனியர் பாலையா ஆகியோர் நடித்த இப்படத்தில் மாணவராக வந்து அடி ராங்கி.. என் ராங்கி.. என டூயட் பாடியவர் தான் நடிகர் யுவன்.

‘சர்கார்‘ பட ஸ்டைலில் கட்சிக்காக ஆட்களைத் தேடும் விஜய்.. இப்படி ஒரு மாஸ்டர் பிளானா?

இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

சாட்டை படத்தைத் தொடர்ந்து ,இவர் நடிப்பில் கீரிப்பிள்ளை, காதலை தவிர வேறோன்றுமில்லை, கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், கடைசியாக வெளியான அடுத்த சாட்டை என 10 படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி உள்ளன. ஆனால் சாட்டை தவிர எந்தப் படமும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் படியாக வரவேற்பைக் கொடுக்கவில்லை.

பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர மணிவண்ணன் செஞ்ச முரட்டு சம்பவம்..மிரண்டு போன இயக்குநர் இமயம்!

இந்நிலையில் முன்னணி ஹீரோக்களே பட வாய்ப்புகளின்றி மாற்று வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் யுவனும் தப்பவில்லை. யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்த படத்தின் அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த படம் கடைசியில் ஆரம்பிக்காமல் அப்படியே நின்று விட்டது. எங்கே போனாலும், பாலா சார் படம் என்ன ஆச்சு? என்றே கேட்க ஆரம்பித்து விட்டனர். அந்த படத்தில் நடிக்கத் தான் பரோட்டா தயாரிக்க கற்றுக் கொண்டேன். கடைசியில் அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது” என்றார்.

மேலும் இவர் தனது ஹோட்டலில் விதவிதமாக புரோட்டா போடுவது போன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அடக் கொடுமையே 15 படங்களுக்கு மேல் நடிச்சும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கவில்லையே என நெட்டிசன்கள் இவரது வீடியோவிற்கு கமெண்ட் பதிவேற்றி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.