பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர மணிவண்ணன் செஞ்ச முரட்டு சம்பவம்..மிரண்டு போன இயக்குநர் இமயம்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் பலர் உதவியாளர்களாகப் பணியாற்றி புகழ் பெற்ற இயக்குநர்களாக வலம் வந்தவர்கள் பலர் உண்டு. பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன், சீமான், மனோஜ்குமார், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் அடங்குவர். மேலும் இவர் அறிமுப்படுத்திய திரைக்கலைஞர்களை எண்ணிக்கையில் சொல்லிவிட முடியாது. ராதா, ராதிகா, கார்த்திக், ரேவதி, பாண்டியன், நெப்போலியன், சுகன்யா என ஏராளமனோர் உண்டு.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய பாரதிராஜாவிடம் நடிகரும், இயக்குருமான மணிவண்ணன் உதவியாளராகச் சேர்ந்தது இப்படித்தான். அதாவது பாரதிராஜாவின் கிழக்கே கோயில் படத்தைப் பார்த்து அவர் எழுதிய நூறு பக்க கடிதத்தை பார்த்த பாரதிராஜா மிரண்டு போய் மணிவண்ணனை நேரில் வரவழைத்தார். பின்னர் அவரின் சினிமா அறிவையும், கலை ஆர்வத்தையும் அறிந்து தன்னிடம் உவியாளராகச் சேர்த்துக் கொண்டார் பாரதிராஜா. அதன்பின் அவர் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார்.

இவ்வாறு கதையில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான படங்கள்தான் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை ஆகியவை. பின்னர் மனோபாலா இயக்கத்தில் உருவான ஆகாய கங்கை படத்தின் கதை இவருடையதே. இப்படி பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்த மணிவண்ணன் முதன் முதலாக மோகன், ராதா, சுகாசினி நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

எம்.ஜி.ஆரே வலியக் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஹீரோயின்.. ஏன் அப்படி செஞ்சாங்க தெரியுமா?

அதன்பின் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி, 24 மணி நேரம், அமைதிப்படை  போன்ற வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத காவியங்களாக அளித்து சென்றவர். இவருக்கும் சத்யராஜூக்கும் இருந்த நட்பு காரணமாக பல படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்தனர். ஒரே நாளில் ஒரு இயக்குனர் இயக்கிய இரு படங்கள் வெளியானது மணிவண்ணனுக்கு மட்டும்தான் அதில் இரு திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் சத்யராஜ்.

இயக்குனராக தமிழ் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்து பல வெற்றி படங்களை இயக்கி வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர் மணிவண்ணன். இப்படி பல காலத்தால் அழிக்க முடியாத காவியங்களை உருவாக்கித் தந்தது மணிவண்ணன் இயக்கிய படங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.