எளந்தாரிப்பய இப்படியா சாப்பிடுறது…! வெளுத்துக்கட்டும் வேல.ராமமூர்த்தியின் சாப்பாட்டு முறை

தமிழ் சினிமாவில் மண் வாசம் சார்ந்த நடிகர்கள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் அந்தக்குறையே இன்று இல்லாத அளவில் மண் சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து குணச்சித்திர நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.

இராமநாதபுரத்துக்காரரான வேல.ராமமூர்த்தி இராணுவத்தில் பணியாற்றி எழுத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பின் எழுத்தாளராக அறியப்பட்டு இன்று புகழ்பெற்ற மண் சார்ந்த நடிகராக கலக்கி வருகிறார். இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் 2008ல் ஆயுதம் செய்வோம் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார்.

இதனையடுத்து, 2013ல் மத யானை கூட்டம் படத்தில் அருமையான வேடத்தில் நடிக்க தொடங்கி தொடர்ந்து கிடாரி, கொம்பன், அப்பா, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, துப்பாக்கி முனை, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு நிகராக இவரின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.

எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி இயல்பிலேயே திடகாத்திரமான உடலும், மிடுக்கான தோற்றமும் கொண்டவர். அதற்குக்காரணம் தான் வாழ்ந்த சூழல் மற்றும் உணவுப் பழக்கம் தான்.  இவரின் சொந்த ஊர் ராமநாதபுரம் அருகில் உள்ள பெருநாழி கிராமம். முழுக்க முழுக்க விவசாயக் குடும்பத்துல பிறந்ததவர். மேலும் இவரின் ஊர் அருகில் முக்கூர் கடல் உள்ளதாம். அங்கிருந்து தினசரி வாவல், நெய் மீன் சீலா, பொட்ட வால, முட்டைப் பாறை மீன்கள் இவர் ஊருக்கு வருமாம்.

வாலி கையில் இருந்த வாட்சை விற்று சான்ஸ் தேடிய நாகேஷ்… தன்னைத் தானாகவே செதுக்கிக் கொண்ட திரைக் கலைஞன்!

வீட்டுக்கு வேண்டப்பட்ட மீன் கடைக்காரர், மீன் வந்ததும் துள்ளத் துடிக்க, உயிருடன்  வீட்டுக்கு கொடுக்க வாரத்தில் பாதி நாள்  மீன் குழம்புதானாம். மேலும் இறைச்சி, அதுபோக கம்பு, குதிரைவாலி, தட்டாங்காய், மிதுக்கங்காய், மஞ்சணத்திக் காய், வேப்பம்பழம் புளியம்பழம்னு காட்டுல விளைஞ்ச எதையும் இவர் விடுவது இல்லை.

ரசாயன உரம் போடாமல் இலைதழைகள், இயற்கையாக வளர்ந்த சத்தான உணவுகளைச் சாப்பிட்டதாலும், கடின உடல் உழைப்பு இருந்ததாலும் இவருக்கு இயல்பாகவே 16 வயதிலேயே திடகாத்திரமான உடம்பு அமைந்து விட்டதாம். இன்றும் மதுரை ஏர்போர்ட் அருகில் தினசரி காலை 4.30-க்கு எழுந்து நடைபயிற்சியும், கத்தி பேசி பேச்சுப் பயிற்சியும் மேற்கொள்வாராம் வேல.ராமமூர்த்தி. 67 வயது ஆனாலும் இன்றும் இளந்தாரி உடம்பு போல் இருக்கும் இவர் இன்றைய இளைஞர்களுக்கு உதாராணமாகத் திகழ்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews