ரஜினியை இதுல வேற லெவல்ல பார்க்கலாம்…! தியேட்டரை விட்டு வெளியே போகும்போது உங்களுக்குள்ள அது வரும்..!

ஜெய்லர்ல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தவர் வசந்த் ரவி. யார் இந்த வசந்த் ரவின்னு கேட்குறீங்களா? தரமணி, ராக்கி படங்களில் நடித்தவர் தான் வசந்த் ரவி. இந்த இரு படங்களிலும் தனித்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து தரமான நடிப்பை ரசிகர்களுக்கு வழங்கியவர்.

இருபடங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது இவர் நடித்து வரும் அசத்தலான படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்த அனுபவம் பற்றி இவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

Vasanth ravi
Vasanth ravi

எப்பவுமே அவருக்கிட்ட பாசிட்டிவ் எனர்ஜி இருந்துக்கிட்டே இருக்கும்.  ரொம்ப தூய்மையான ஆத்மார்த்தமான மனிதர். தொழில்துறையில் யாரும் இந்த அளவுக்கு இல்லை. ஜெயிலர் படத்தில் அவருடன் நடித்தது ஒரு சர்ப்ரைஸ். படத்தில் அவருடைய நடிப்பு முற்றிலும் மாறுபட்டது.

உண்மையில அப்படித்தான். எல்லாருக்குள்ளும் ரெண்டு மைன்ட்ஸ் இருக்கும். இது பண்ணலாமா… வேணாமான்னு. ஒண்ணு இதைப் பண்ணுன்னு சொல்லும். இன்னொண்ணு இதைப் பண்ணாத… ஏன் பண்ணுறன்னு சொல்லும். எல்லா விஷயத்துலயும் இப்படித்தான். நாம சாப்பிடும்போதும் சரி. வெளில போகும்போதும் சரி. ஒருத்தரு கூட பழகும் போதும் சரி. அப்படித்தான் இருக்கும்.

இந்தப் படத்துல ஒரு அண்டர்லைன் இதுதான். ஒரு ஹாரர்ல பழிவாங்குற வழக்கமான கதை கிடையாது. ஆனா படம் பார்த்துட்டு நீங்க தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒரு ஸ்ட்ராங்கான ஒரு விஷயம் உங்களுக்குள்ள அழுத்தமா பதிஞ்சிடும். உங்களுக்குள்ள அந்தப் பாதிப்பு கொஞ்ச நேரம் இருக்கும்.

இந்தப் படத்துல எனக்கு எதோ ஒண்ணு தோணுச்சி. இது நல்லாருக்கு. இதைப் பண்ணியே ஆகணும். இது ஒரு பயங்கரமான ஹாரர் அண்டு த்ரில்லர் படம். டைரக்டர் அவர் பாயிண்ட் ஆப் வியூல ஒரு எக்ஸ்பிரஷனைப் பார்த்து அதைப் படத்துல கொண்டு வந்துருக்காரு.

Rajni3
Rajni3

இது வந்து ரியல் லைப்ல கிடையாது. நாம வேற எங்கயுமே இதைப் பார்த்துருக்க மாட்டோம். ஒரு சைக்லாஜிக்கல் ட்ரீட்மெண்ட். டைரக்டர் உங்களுக்குள்ள அந்த பயத்தைக் கொண்டு வர்றதுக்கு நிறைய உழைச்சிருக்காரு. அதே மாதிரி படத்துல நிறைய இடம் இருக்கு.

ஒரு ஒரு படத்துலயும் நான் நடிக்கறதுக்குக் காரணம் அந்தப் படம் பிடிச்சிருந்தா மட்டும் தான் நடிப்பேன். அப்படி நடிக்குற பட்சத்துல போன படத்தை விட இதுல வித்தியாசமா பெட்டரா நடிக்கணும்னு பார்ப்பேன்.

அப்படித்தான் ராக்கி முடிச்சிட்டு ஒரு டிபரண்ட் ஜானர்ல படம் பண்ணனும்னு நினைச்சப்ப இந்தப் படம் கிடைச்சது. அதுல நாம டிபரண்ட்டா கேரக்டர் மட்டுமல்ல. பாடி லாங்குவேஜ்லயும் காட்டியிருக்கேன்.

மூணு படத்துலயும் தாடி இருக்கு. ஆனா லுக் டிபரண்ட். ஹிஸ்டாரிக்கல் பிலிம் பண்ணனும்னு ஆசை இருக்கு. அது ஒரு வார் பிலிமா இருக்கலாம். அல்லது ஜோதா அக்பர் மாதிரி ஒரு லவ் ஹிஸ்டாரிக்கல் செட்டப்ல இருக்கலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews