பிரபல காமெடி நடிகரான தன் கணவர் இறந்தபின்பு அவர் மனைவி செய்த செயல்.. இப்படி ஒரு அன்பா?

தமிழ் சினிமாவில் என்.எஸ்.கலைவாணருக்கு அடுத்தபடியாக காமெடி இடத்தினை நிரப்பியவர் தங்கவேலு. டணால் தங்கவேலு என்றால் தான் ரசிகர்களுக்குத் தெரியும். தான் நடித்த சிங்காரி படத்தில் அடிக்கடி “டணால்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், டணால் தங்கவேலு என்று இவர் அழைக்கப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக காமெடியில் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்தவர். இவரது மன்னாரன் கம்பெனி காமெடி வெகு பிரபலம்.

எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில்தான் தங்கவேலுவும் அறிமுகமானார். இவரின் மனைவிதான் பல ஹிட் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற எம்.சரோஜா. இவர் 1951 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் இணைந்து சர்வாதிகாரி என்ற படத்தில் நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த எம்.சரோஜா அடுத்தடுத்து பல திரைப்படங்களில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார். குறிப்பாக  இவரின் நடிப்பில் வெளியான ”கல்யாணப்பரிசு”, ”அறிவாளி”, ”வணங்காமுடி”, ”மருதநாட்டுவீரன்”, ”அன்னக்கிளி” போன்றவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

“சர்வாதிகாரி” திரைப்படத்தை தயாரித்த ”மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் அப்படத்தில் எம்.சரோஜா பேசி நடிக்கும் வசனத்தை கண்டு அசந்து போன நிறுவனம் உடனே அவருக்கு தங்களது நிறுவனத்தின் தொடர்ந்து பத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 10 படங்களில் நடித்த ஒரே நடிகை என்று பெருமை கூறியவர் ”எம்.சரோஜா. இதுவரை வேறு எந்த நடிகைக்கும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வாகும்.

ரசிகர்கள் மேல அப்படி என்ன கோபம் சிவக்குமார் சார்? அன்று செல்போன்.. இன்று சால்வை..

இந்நிலையில் தங்கவேலுவும், சரோஜாவும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.  இவ்வாறு திரையில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் நிஜ வாழ்விலும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கலக்கிய திரைப்படம் ”கல்யாணப்பரிசு”. பின்னர் அவரது கணவர் இறந்த பிறகு அப்படியே தான் திரைப்படங்களில் நடிக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

தான் நடிப்பதை நிறுத்தியதற்கான காரணத்தைக் கூறுகையில் “என்னுடைய கணவர் எனக்கு விட்டுட்டு போன சொத்து என்றால் நடிப்புதான். அந்த நடிப்பை விற்று நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை எவ்வளவோ பெரிய கம்பெனிகள் மற்றும் சின்ன கம்பெனிகள் நடிக்க அழைப்பு விடுத்தாலும் என் மனம் திரைப்படங்களில் நடிக்க அனுமதிப்பதில்லை” என்று பத்திரிக்கை பேட்டியில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் மேல் கொண்ட பற்று காரணமாக நடிகையின் இந்த முடிவு அப்போதுள்ள திரையுலகினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews