நடிகர் தனுஷிற்கு போட்டியாக இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!

சின்னத்திரை தொலைக்காட்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறினார். அதைத்தொடர்ந்து அது இது எது என பல காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளராக மக்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பொதுவாக காமெடியை மையமாக வைத்து வரும் திரைப்படங்களில் நடித்து குடும்பங்கள் விரும்பும் கதாநாயகனாக உருவெடுத்தார். தற்பொழுது தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களின் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷ் உடன் இணைந்து நடித்த திரைப்படம் 3. இந்த படத்தில் ஹீரோ தனுஷிற்கு நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். நண்பர்களாக பழகி வந்த இந்த இரண்டு ஹீரோக்களும் தற்பொழுது தமிழ் சினிமாவின் போட்டி கதாநாயகர்களாக மாறி உள்ளனர். நடிகர் தனுஷை போன்று சினிமாவில் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என நினைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷின் வழியை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி படங்களை தயாரித்து வருவது போல நடிகர் சிவகார்த்திகேயனும் எஸ் கே ப்ரெட்க்ஷன் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி கனா திரைப்படத்தை தயாரித்துள்ளார் அதைத்தொடர்ந்து டான் போன்ற திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

அதே நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷை போன்று பாடல்கள் எழுதுவது, பாடல் பாடுவது என அடுத்தடுத்து தனது திறமைகளை வெளிக்காட்ட துவங்கினார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பின்னாடி பாடகராக அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து மான் கராத்தே திரைப்படத்தில் ராயபுரம் பீட்டர் பாடல், காக்கிச்சட்டை படத்தில் ஐ அம் சோ கூல் பாடல் என டி இமான் மற்றும் அனிருத் இசையில் பட பாடல்களை பாட துவங்கினார். அதைத்தொடர்ந்து நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கல்யாண வயசு தான், செல்லம்மா செல்லம்மா, அரபிக்கூத்து என மாஸ் ஹிட் கொடுத்த பாடல்களுக்கு பாடல் ஆசிரியராக இருந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடிப்பதற்கு இணையாக இயக்கத்திலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் அதைத் தொடர்ந்து தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்குகிறார். ராயன் என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குவதில் தனுஷ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து தனுஷ் தனது அக்கா மகனை வைத்து மூன்றாவது திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து தற்பொழுது தனுஷை பின்பற்றி வரும் சிவகார்த்திகேயனும் அடுத்து ஒரு படத்தில் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

லியோ, ஜெயிலர், துணிவு திரைப்படங்களை தூக்கி சாப்பிட்ட தனுஷின் 3 திரைப்படம்!

தற்பொழுது சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து எஸ் கே 21 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்கே 23 படத்தில் ராணுவ வீரனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதால் அதற்கான உடல் கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த படத்திற்காக 200 சதவீத நம்பிக்கையுடன் உழைத்து வருவதாகவும் கூறி வந்த சிவகார்த்திகேயன் இதை அடுத்து அவர் இயக்கும் திரைப்படத்திற்கும் அதே போன்ற கடின உழைப்பில் ஈடுபடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து உறுதியான தகவல் வெளியாகும் வரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.