வளையல் கடைக்காரரில் இருந்து ஹீரோ வரை… பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியன்…!!

தமிழ் திரை உலகில் கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் பாண்டியன். பாரதிராஜாவால் கண்டுபிடிக்கப்பட்ட இவர் மதுரையில் தனது குடும்பத்திற்கு சொந்தமான வளையல் கடையில் விற்பனையாளராக இருந்தார். அதன்பின் தமிழ் சினிமாவின் ஹீரோவானார். முதல் படம் சூப்பர் ஹிட் ஆக அதன்பின் அவர் சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். அவரது நடிப்பு தமிழ் சினிமாவில் தனித்துவமாக அமைந்தது.

நடிகர் பாண்டியன் மதுரையை சேர்ந்தவர். இவரை தற்செயலாக பார்த்த பாரதிராஜா தனது மண்வாசனை படத்துக்கு இவர் தான் ஹீரோ என்பதை முடிவு செய்தார். உடனே அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தனது படத்தின் ஹீரோவாக்கினார். மண்வாசனை படம் 1983 ஆம் ஆண்டு வந்து திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?

இதனை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிய ஆரம்பித்தது. ஹீரோவாகவே ஏராளமான படங்களில் நடித்தார். மண்வாசனை வெற்றிக்கு பிறகு மீண்டும் பாண்டியன் – ரேவதி இணைந்து நடித்த புதுமைப்பெண் திரைப்படமும் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது. பாண்டியன் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்றால் சிவாஜி கணேசனுடன் நடித்த வாழ்க்கை, ராமராஜன் இயக்கத்தில் உருவான மண்ணுக்கேத்த பொண்ணு, பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ஆண்பாவம், சத்யராஜ் உடன் நடித்த முதல் வசந்தம் ஆகிய படங்களை கூறலாம்.

மேலும் சிவாஜி உடன் தாய்க்கு ஒரு தாலாட்டு, விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி, விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் உள்ளிட்ட பல படங்களில் அவர் குணசித்திர கேரக்டர்களில் நடித்தார். அதேபோல் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

7ஆம் வகுப்பு மட்டுமே படித்த பரோட்டா சூரி.. திரையில் ஜொலிப்பதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை…

1983 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமான பாண்டியனுக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும் 13 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அவற்றில் சில வெற்றி படங்களாக  அமைந்தது. 1985 முதல் 1988 வரை பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பாண்டியன் ஒவ்வொரு ஆண்டும் ஆறு முதல் ஏழு படங்களில் நடித்தார். கிராமத்து கதைகளில் ராமராஜன் நடிக்க வந்தபின்னர் தான் பாண்டியனுக்கு வாய்ப்பு குறைந்தது.

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு படங்களின் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. அப்போது பாரதிராஜா இயக்கத்தில் உருவான கிழக்கு சீமையிலே படத்தில் அவர் ஒரு மைனர் கேரக்டரில் நடித்தார். அந்த படம் அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் கடைசியாக நடித்தது கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான புதுசு கண்ணா புதுசு என்ற படம் தான்

நடிகர் பாண்டியன் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் இணைந்து பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தார். பாண்டியனின் வெள்ளேந்தியான மதுரை ஸ்லாங் பேச்சு தொண்டர்களையும் பொதுமக்களையும் கவர்ந்தது.

நயன்தாராவின் மாமனார், மாமியார் ஒரு போலீஸ் அதிகாரியா? இது என்ன புதுசா இருக்கு..

இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு திடீரென அவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் பாண்டியன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கக்கூடியவை.

Published by
Bala S

Recent Posts