ரசிகர் மன்றமே வேண்டாம் என்ற கமல்.. ரசிகர் செய்த செயலால் மாறிய கமலின் மனம்.

திரையுலகைப் பொறுத்தவரை தங்களது அபிமான நட்சத்திரங்களைப் பிடித்து விட்டால் போது அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடும் அளவிற்கு ரசிகர்கள் அவர்களிடம் அன்பு மழை பொழிவர். தியாராஜ பாகவதர் தொடங்கி இன்றைக்கு உள்ள சிவகார்த்திகேயன் வரை ரசிகர் மன்றங்கள் உருவாகி அவர்கள் நடிக்கும் படங்களைக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ரசிகர் மன்றங்கள் மூலமாக இயலாதோருக்கு நலத்திட்ட உதவிகள் என சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி என அனைவருக்கும் ரசிகர் மன்றங்கள் இருந்த போதிலும் கமல் இதில் சற்று வித்தியாசமானவர்.

இந்நிலையில் நடிகர் சிவக்குமாருக்கு அப்போது ரசிகர்கள் அதிகம் இருந்தார்கள். அப்போது அவர் ரசிகர்கள் சேர்ந்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையை அவரிடம் தெரிவத்த போது அவர் அதை மறுத்திருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் இதுபோல பல ரசிகர் மன்றங்கள் இருந்துள்ளன. சிவக்குமாரின் இந்த முடிவைக் கேட்ட கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து இனி ரசிகர் மன்றம் வேண்டாம் கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். அப்போது கமலின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றமையால் கூடுதல் எண்ணிக்கையில் ரசிகர்கள் இணைந்தார்கள். மேலும் அவர் மீது கொண்ட அன்பால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தொடர் ஜோதி ஏற்றி அவர் வீட்டுவரை கொண்டு வந்திருக்கின்றனர்.

இதனைக் கண்டு சிலிரித்துப் போயிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் ஜோதியுடன் அவரைக் கட்டிப் பிடிக்க முயன்ற போது அதிலிருந்த எண்ணெய் கமலின் கைகளில் பட்டு புண்ணாகி இருக்கிறது. இதனால் கோபமுற்றிருக்கிறார் கமல்.

அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?

பின்னர் சாந்தமாகி அவர்களிடம் ஏன் இவ்வாறு எல்லாம் செய்கீறீர்கள் என்று கேட்க, அவர்கள் அண்ணே உங்களுக்காக எதையும் செய்வோம் என்று கூறயிருக்கின்றனர். ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்த கமல் இனி இவர்களை இந்த மாதிரி பயன்படுத்த வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் நற்பணி மன்றமாக மாற்றினார்.

அன்றுமுதல் தன்னை அண்ணன் என்று அழைத்த தம்பிகளுக்காக அவர்களை நல்வழிப்படுத்த நற்பணி மன்றங்கள் மூலம் பல சமூக சேவைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் கமல். இன்று வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...