சினிமாவை தாண்டி பிசினஸில் களம் இறங்கும் நடிகர் கமல்! பொறுப்பேற்றுக் கொள்ளும் லேடி காஸ்ட்யூம் டிசைனர்!

தமிழ் சினிமாவில் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலக நாயகன் கமலஹாசன் இன்றளவு இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்பொழுது இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்புகள் திருவள்ளுர் மாவட்டத்தில் கவரப்பேட்டை எனும் பகுதியில் நடந்து வருவதாகவும் இந்த வியாழன் கிழமையுடன் அங்கு அந்த படப்பிடிப்பு முடிய உள்ளதாகவும் அதை தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடுத்த ஷெடியூல் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில் கமல் தனது 233 வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துவரும் கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இறுதியாக கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இளம் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு போன்ற நடிகர்களை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

கேமியாவாக நடிக்க ஒப்புக்கொண்டு ஹீரோவாக நடித்த ரஜினி! 25 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

இந்த நிலையில் கமல் சொந்த பிசினஸ் ஒன்றில் களமிறங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. பிரபல திரை விமர்சகர் ஒருவர் கூறிய தகவலின் படி நடிகர் கமல் சொந்த பிசினஸ் ஒன்றில் களமிறங்க உள்ளதாகவும் அதை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைப் படத்தின் காஸ்டியூம் டிசைனராக இருப்பது அமிர்தா ராம். இவர் நடன இயக்குனர் ராமச்சியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது நடிகர் கமலஹாசனின் காஸ்ட்யூம் டிசைனர் ஆக உள்ளார். மேலும் கமலின் நம்பிக்கை கூறிய கதாபாத்திரமாகவும் மாறியுள்ள இவர் கமல் செய்யும் சொந்த பிசினஸ் இன் முழு பொறுப்பையும் ஏற்று நடத்தி வருகிறார்.

மேலும் இவர் படத்திற்காக வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்கு கமலின் சொந்த பிசினஸ் குறித்தும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகர்களைப் போல சினிமாவை தாண்டி நடிகர் கமல் சொந்த பிசினஸில் களமிறங்கி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.