பிரபல மாடல் அழகியை கரம் பிடித்த காளிதாஸ் ஜெயராம் : விமரிசையாக நடந்த நிச்சயதார்த்தம்

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயராம். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது அனுபவ நடிப்பால் அல்வா சாப்பிடுவது போல் நடிப்பில் அசத்தி விடுவார். ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். மலையாளத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த என்டே வீடு அப்புவின்டேயம் என்ற படம் இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன்பின் பாவக் கதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் திருநங்கையாக நடித்து பெயர் பெற்றார். பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது‘ படத்தில் கவனிக்க வைத்தவர் ‘விக்ரம்‘ படத்தில் கமலின் மகனாக நடித்திருப்பார்.

தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸ் : இளையராஜா பயோபிக் ஷுட்டிங் அப்டேட்

இவ்வாறு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான காளிதாஸ் சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான தாரணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார். ஒன்றாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, பண்டிகைகளின் போது குடும்பமாக ஒன்று கூடுவது என தனது காதல் குறித்த விஷயங்களில் காளிதாஸ் வெளிப்படையாக இருந்தார்.

2019-ல் ‘மிஸ் தமிழ்நாடு‘ பட்டம் வென்றவரான இவருக்கும் காளிதாஸுக்கும் நேற்று வெகு விமரிசையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் பச்சைக்கொடி காட்ட குடும்பத்தினர் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்தனர்.

விழாவில் பிங்க் நிற காஸ்ட்டீயூமில் காளிதாஸும், தாரணியும் ஜொலித்தனர். சமீபத்தில் ஹரீஷ் கல்யாண், அசோக் செல்வன், கவின், கௌதம் கார்த்திக் போன்றோரது காதல் திருணமங்கள் கைகூட அந்த லிஸ்ட்டில் தற்போது காளிதாஸ்- தாரணியும் இணைந்தள்ளனர். இது குறித்த வீடியோக்களும் போட்டோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது காளிதாஸ் ஜெயராம் கமலின் இந்தியன் 2, தனுஷ் நடிக்கும் 50-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் அவள் பெயர் ரஞ்சனி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews