தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸ் : இளையராஜா பயோபிக் ஷுட்டிங் அப்டேட்

நடிகர் தனுஷ் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் வேளையில் தற்போது பயோபிக் வரிசையிலும் இணைந்து விட்டார். எம்.ஜி.ஆர் முதல் இப்போது உள்ள நடிகர்கள் வரை தலைவர்கள், மகான்கள், பிரபலங்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் வகையில் அவர்களின் பயோபிக் -ல் நடித்து கலக்கினர்.

இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏராளமான பயோபிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன், திருநாவுக்கரசர், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல படங்களை உதாராணமாகச் சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது 100-வது படமான ராகவேந்திரா திரைப்படத்தில் மகான் ராகவேந்திரராக நடித்திருப்பார்.

அண்மையில் நடிகர் மாதவன் ‘தி ராக்கெட்டரி‘ படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடிக்க தேசிய விருதையும் தட்டிச் சென்றது இப்படம். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வந்தன. தற்போது அதை உறுதி செய்யும் வகையில் தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி சர்பிரைஸாக அசத்தல் அப்டேட் வெளியாகி உள்ளது.

இதெல்லாம் நடக்குற காரியமா? தளபதி 68 பற்றி வாயைத் திறக்காத மோகன்

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் தயாரிக்கும் இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025-ல் இப்படம் திரைக்கு வரும் எனவும் அப்டேட் வெளியாகி உள்ளது. தற்போது தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் இந்த அப்டேட் அவரது ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
மேலும் ‘தனுஷ் 50‘ படம் முடிந்த பிறகு இப்படத்தின் ஷுட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ilayaraja

ஏற்கனவே தனுஷ் இளையராஜாவின் இசையில் வெற்றி மாறனின் விடுதலை படத்தில் ‘உன்னோட நடந்தா..‘ பாடலைப் பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும் தனுஷும், இளையராஜாவும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அருகருகே இவர்கள் கிராமம் என்பதாலும் மண்வாசனையுடன் படம் உருவாகும் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews