ஸ்க்ரீன்ல அவரு வந்தாலே நடிப்பு பறக்கும்.. எல்லாரையும் ஓவர்டேக் செஞ்சு நடிப்பில் பேரு எடுத்த பிரபலம்..

சினிமாவை பொறுத்தவரையில் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், சிலர் சிறு கதாபத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அதன் தாக்கம் அதிகமாக இருந்தால் அவை காலம் கடந்து நிலைத்து நிற்கும். இதன் காரணமாக, பல பழம்பெரும் நடிகர்கள் மறைந்து போனாலும் கூட அவர் நடித்த காட்சிகள் எப்போதுமே மக்கள் மனதில் நிறைந்து தான் இருக்கும்.

அந்த வகையில் முக்கியமான ஒரு நடிகர் தான் ஈஆர் சகாதேவன். இவர் ’தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் பத்மினியை அடைய விரும்பும் நாகலிங்கம் என்ற கேரக்டரில் தனது பண்பட்ட நடிப்பினால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

கடந்த 1937 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகிறார் ஈஆர் சகாதேவன். இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, மலைக்கள்ளன், குலேபகாவலி, மாயா பஜார், காத்தவராயன், புதுமைப்பித்தன், தில்லானா மோகனாம்பாள் படங்களில் இவரது நடிப்பு சூப்பராக இருக்கும்.

ஆஜானுபாகுவான உடற்கட்டு, தெளிவான வசன உச்சரிப்பு, விரசமில்லாத வில்லத்தனம் போன்ற கேரக்டரை இவர் தேர்வு செய்து நடித்திருப்பார். 1937 ஆம் ஆண்டு ராஜசேகரன் என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானாலும் அதன் பிறகு அவருக்கு நான்கு ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு 1941 ஆம் ஆண்டு தயாளன் படத்தில் இருந்து தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

er sahadevan

இருப்பினும் இவருக்கு 1947 ஆம் ஆண்டு வெளியான ’ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்தில் நடித்த புரந்தரன் என்ற கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவர்  சுகன்யா, கலாவதி, குலேபகாவலி, புதுமைப்பித்தன், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், பெற்ற மகனை விற்ற அன்னை, பூலோகம், கூண்டுக்கிளி, மலைக்கள்ளன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக கூண்டுக்கிளி திரைப்படத்தின் சொக்கலிங்கம் கேரக்டரிலும், ரம்பையின் காதல் திரைப்படத்தில் இந்திரனாகவும் நடித்திருப்பார் ஈஆர் சகாதேவன். அதே போல் மாயாபஜார் திரைப்படத்தில் அண்ணா என்ற கேரக்டரிலும் புதுமைப்பித்தன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்திருப்பார். 1960களில் இவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் ஸ்ரீவள்ளி படத்தில் நம்பி ராஜா, மகாவீரர் பீமன் திரைப்படத்தில் பீமன் போன்ற கேரக்டரில் நடித்தார்.

சிவாஜி கணேசன், கே பி சுந்தராம்பாள் நடித்த மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் அரசர் வேடத்திலும் நடித்திருப்பார்.  நவராத்திரி, வீர அபிமன்யு, சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, நடு இரவில், ஆதிபராசக்தி போன்ற படங்களில் நடித்தார். 1972 ஆம் ஆண்டு இவர் ’அகத்தியர்’ திரைப்படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு இவர் திரைப்படங்களில் நடித்ததாக தெரியவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...