இயக்குனர் நடிகர் மணிவண்ணன் நினைவு தினம் இன்று

இயக்குனர் மணிவண்ணன் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் ஆகும். நிழல்கள் உட்பட பாரதிராஜாவின் படங்களுக்கு இவர்தான் கதை வசனகர்த்தா.

7b050b576b44780c584f1396f154853f

கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் மோகன், சுகாசினியை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.சிறந்த திரைக்கதை அமைப்பதில் வல்லவர் இவர்.

முதல் படம் மட்டுமே அமைதியான குடும்பம் சார்ந்த படம் மற்ற படங்கள் எல்லாமே திகில் மற்றும் அரசியல் கருத்துக்களையும் அள்ளி தெளித்த படங்கள்.

கனவில் கண்ட திகில் சம்பவங்கள் எல்லாம் நேரில் நடக்கும் வகையில் ஒரு மர்மப்படம் அதுதான் நூறாவது நாள். மிக திகிலூட்டும் திரைக்கதையில் அமைக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரும் வெற்றியடைந்த படம். சத்யராஜின் திகிலூட்டும் மொட்டை கெட் அப் மோகனின் அப்பாவித்தனம் கலந்த வில்லத்தனம் இப்படத்தில் பேசப்பட்டது.

ஒரே நாளில் தனது மனைவியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த கயவன் எக்ஸ் டபிள்யூ ராமரத்தினம் என்ற கொடூரனை நாயகன் பல கட்டங்களில் கொல்ல முயற்சி எடுக்கும் கதைதான் 24 மணி நேரம்.

எக்ஸ் டபிள்யூ ராமரத்தினமாக சத்யராஜும், நாயகனாக மோகனும் நடித்திருந்த த்ரில்லர் படமிது மணிவண்ணன் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருந்தார்.

மணிவண்ணன் இயக்கத்தில் வந்த சின்னத்தம்பி பெரியதம்பி சிறந்த ஜனரஞ்சக குடும்ப படமாகும். தாய்மார்களால் மிகப்பெரும் பாராட்டை பெற்ற படம் இது.

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ்தான் அதிக படங்களில் நடித்திருப்பார். சிறந்த ஆக்சன் படமான ஜல்லிக்கட்டு படம் மணிவண்ணன் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று. நீதிபதியும் குற்றவாளியும் சேர்ந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அதற்கு காரணமானவர்களையும் பலிவாங்குவது கதை. இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிறப்பித்தார். அதுவே அவரின் கடைசி திரைப்பட விழாவாகும்.

மணிவண்ணன் இயக்கிய பாலைவன ரோஜாக்கள், இளமைக்காலங்கள் ராசாமகன், ஆண்டான் அடிமை என ஒவ்வொன்றும் ஒரு வகை வித்தியாசமான சினிமா இருந்தாலும் அவர் இயக்கிய அமைதிப்படை படம்தான் மிகச்சிறப்பான இடத்தை பிடித்தது.

நறுக்கு தெறிக்கும் அரசியல் வசனங்கள், சிறப்பான திரைக்கதை நக்கலான வில்லன் சத்யராஜ் நடிப்பு, பதவிக்கு வர நினைக்கும் அரசியல்வாதி எந்த எல்லைக்கும் செல்வான் என்ற காட்சியமைப்புகள் இப்படத்தில் பிரபலம்.

கடைசியாக அமைதிப்படை 2 படத்தை இயக்கினார் இது போதிய வரவேற்பை பெறவில்லை.

ஒரு கட்டத்தில் லேசாக இயக்கத்தை ஒதுக்கிவிட்டு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் கவனம் செலுத்திய மணிவண்ணன் கடந்த 2013ல் இதே நாளில் மறைந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews