என்னுடன் நடிக்க எல்லா ஹீரோவும் நடுங்குவார்கள்! ஆனால் சிவாஜி மட்டும்.. ரகசியத்தை வெளியிட்ட நடிகை பானுமதி!

முன்னணி நடிகை பானுமதி நடிப்பில் 1957ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட நான்கு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த நான்கு திரைப்படங்களிலும் நடிகை பானுமதி நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து ஜோடியாக நடித்திருப்பார். அதில் முதல் திரைப்படம் 1957ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியான மக்களைப் பெற்ற மகராசி திரைப்படம். கே சோமு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தான் முதன்முதலில் வட்டார மொழி வழக்கில் வெளியான திரைப்படம். கொங்கு நாட்டு மொழி வழக்கு பேசக்கூடிய செங்கோடன் கதாபாத்திரத்தில் சிவாஜியும், அவரின் முறைப்பெண் பொன்னுரங்கம் கதாபாத்திரத்தில் நடிகை பானுமதியும் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த பாடல். இந்த பாடலை இசையமைப்பாளர் டி எம் எஸ் உடன் இணைந்து பானுமதி பாடியிருப்பார்.

அதன் பின் நடிகை பானுமதி நடிகர் அசோகனை ஹீரோவாக வைத்து மணமகன் தேவை எனும் காமெடி திரைப்படத்தை தொடங்கினார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க பானுமதியை மையமாக வைத்து கதைகள் அமைந்திருக்கும். அதன் பின் இந்த படத்தில் நடிகர் அசோகனை விலக்கிவிட்டு நடிகர் திலகம் சிவாஜி ஹீரோவாக ஒப்பந்தமானார். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து சந்திரபாபு, டி ஆர் ராமச்சந்திரன் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். நடிகர் சிவாஜி உடன் இணைந்து நடித்தது ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது என இந்த படத்தில் நடித்த பின் நடிகை பத்மினி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மூன்றாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் ராணி லலிதாங்கி. 1957ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடித்தது வேறொரு நடிகர். அந்த பிரபல நடிகர் ஒரு சில காரணங்களை மையமாக வைத்து இந்த படத்தில் நடிப்பதை மறுத்துள்ளார். அதற்கான காரணம் இந்த படத்தில் ஹீரோ கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டுபவனே ஆண்டவனே இல்லையே உன்னை போல் எனும் பாடல் நடிக்க வேண்டும். இந்த பாடல் மூடநம்பிக்கை கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடலில் கருத்துக்கள் திமுக கொள்கைக்கு விரோதமாக அமைந்திருப்பதால் நான் இதில் நடிக்க மாட்டேன் என அந்த பிரபல ஹீரோ விலகியுள்ளார். அதன்பின் இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜியை நடிக்க வைத்து மிகப்பெரிய வெற்றியை கண்டார் கதை ஆசிரியர் தஞ்சை ராமையாதாஸ்.

கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக நடிகர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதே ஆண்டு இறுதியாக அம்பிகாபதி திரைப்படம் வெளியாக இருந்தது. இந்த படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் சிவாஜிக்கும் பானுமதிக்கும் இடையே சிறிய சண்டை ஒன்று ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தில் ஒரு சில காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனால் நடிகர் சிவாஜியும் பானுமதியும் தன் தனிப்பட்ட சண்டையை ஓரமாக வைத்துவிட்டு படத்தில் காட்சிகளுக்கு தகுந்தார் போல் இணைந்து நடித்திருந்தனர். இருவரின் நடிப்பிற்கு ஏற்றார் போல் இந்த திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வருடத்தில் மட்டும் நடிகர் திலகம் சிவாஜியும் நடிகை பானுமதியும் இணைந்து நான்கு படங்கள் நடித்திருந்தாலும் இந்த இரு நடிகர்களும் இணைந்து பத்து திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் பானுமதி நடிகர் திலகம் சிவாஜி குறித்து ஓர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன் எல்லா ஹீரோக்களும் என்னை நெருங்க பயப்படுவார்கள். ஆனால் சிவாஜி போல் திறமையான நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவர் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளி காட்டக் கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர் என கூறியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.