கேப்டன் விஜயகாந்த்தைப் பார்த்து அருண் விஜய் எடுத்த அதிரடி முடிவு: மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு

வாழும் போது கர்ணனாக இருந்தகேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது. அவர் உயிருடன் இருக்கும் போது செய்த நல்ல திட்டங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும். அண்மையில் இறந்த விஜயகாந்தின் உடலானது தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி இவரது சமாதியைக் காண ஆயிரக்கணக்கில் தொண்டர்களும், பொதுமக்களும், திரைப்பிரபலங்களும் வந்து மரியாதை செலுத்திய வண்ணம் உள்ளனர். அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் கேப்டன் விஜயகாந்துக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே இவர் தந்தை விஜயக்குமார் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில் தற்போது கையில் கட்டுடன் சமாதிக்கு வந்த அருண் விஜயை பலரும் வியப்பாகப் பார்த்தனர். கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அருண்விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கேப்டன் அவர்களின் இறுதி நிகழ்வில் தன்னால் வர இயலவில்லை. கடந்த கையில் அடிபட்டதன் காரணமாக ஒன்றரை மாதமாக எங்கும் செல்லவில்லை. இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதது பெரிய குறையாக உள்ளது.

சண்டைக் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதில் அவர்தான் எனக்கு குரு. அவரைப் பார்த்தே சினிமாவில் சண்டைக் காட்சிகள் கற்றுக் கொண்டேன். மேலும் கேப்டன் போன்று ஆக்சன் படங்கள் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறேன்.

“நான் ஒண்ணும் இசைஞானி கிடையாது“ கர்வத்தை தூக்கி எறிந்த இளையராஜா

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு கேப்டன் பெயர் வைப்பது குறித்து சங்கம் நிர்வாகிகள் பரிசீலிப்பார்கள். ஆனால் நடிகர் சங்க கட்டிடத்தின் ஒரு அங்கமாவது அவருடைய பெயரில் இயங்க வேண்டும் என்பது என் விருப்பம். மேலும் படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு போட்டு வேற்றுமையைக் களைந்தவர் கேப்டன் விஜயகாந்த். இனி நானும் அதே போன்றே பின்பற்ற உள்ளேன். நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துள்ளேன்.“ இவ்வாறு அருண் விஜய் கூறினார்.

தற்போது அருண்விஜய்யின் Mission Chapter 1 படம் பொங்கலன்று திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலாவின் வணங்கான் படத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews