தளபதி 68 படத்தில் இப்படி ஒரு தங்கச்சி சென்டிமென்ட்டா… அப்போ அந்த தங்கச்சி யாருப்பா?

தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னையில் இந்த படத்தின் முதல் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் காட்சியில் முன்னணி நடிகர் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த பாடல் காட்சிக்கு ராஜசுந்தரம் மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளார்.

லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்திற்கு இணையாக தளபதி 68 படத்திற்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையான விஜய்யை இந்த படத்தில் பார்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள வில்லன்களுக்கு மாறாக 80,90களில் முன்னணி ஹீரோவாக இருந்த மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

பல நாட்கள் கழித்து மீண்டும் படத்தில் களமிறங்கும் மைக் மோகன் தளபதி 68 பூஜை விழாவின் போது நீண்ட தாடியுடன் மாஸாக வந்தது மக்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் அடுத்த ஷெடுலுக்காக படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாடுகளில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று நடைபெற உள்ள லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை முடித்ததும் தளபதி விஜய்யும் தாய்லாந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இந்த தளபதி 68 படம் ஒரு டைம் டிராவல் படமாக இருந்தாலும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் காரணத்தினால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

மேலும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜயின் திரைப்படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகம். பெரும்பாலும் விஜய் திரைப்படங்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடுவது வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தளபதி 68 திரைப்படத்தில் ஒரு தங்கச்சி சென்டிமென்ட் கதை அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் எம்ஜிஆர் இடம் அதிக முத்தம் பெற்ற ஒரே ஹீரோ யாரு தெரியுமா?

சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திலும் அதே தங்கச்சி சென்டிமென்ட் இருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தங்கச்சியாக மடோனா நடிக்க அவர்கள் இறந்ததை தொடர்ந்து கதை உருவாக்கப்பட்டிருந்தது.

அதைப்போல் தளபதி 68 படத்திலும் மிக முக்கியமான தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக லவ் டுடே படத்தின் கதாநாயகி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹீரோயின் இவானா இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

பெரும்பாலும் விஜய் திரைப்படங்களில் தங்கச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலம் அடைவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் அனைவர் மனதில் இடம் பிடித்த நடிகை இவானா நடிப்பது இளம் ரசிகர்களையும் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.