கனவு காணுங்கள்! இளைஞர்களின் இலட்சிய கனவு நாயகன் ஏபிஜே. அப்துல் கலாம்…!

“கனவு காணுங்கள்! உறக்கத்தில் வருவது அல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு” என அனைவரையும் லட்சிய கனவு காண செய்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள்.

தமிழகத்தின் கடைக்கோடியான ராமேஸ்வரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவிலேயே உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் விற்றவர். இளமைக்காலத்தை வறுமையால் கடந்த இவர் புரிந்த சாதனைகள் அளப்பரியது.

திருச்சி ஜெயின் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்த இவர் 1955 ஆம் ஆண்டு சென்னை எம்ஐடி யில் விண்வெளி பொறியியல் படிப்பினை படித்தார்.‌ கல்லூரி நாட்களில் ஸ்காலர்ஷிப்பில் படித்ததால் அப்துல் கலாம் அவர்களுக்கு அவருடைய உணவு பட்டியலில் சைவ உணவுகள் தான் இருக்கும். அப்பொழுது சைவ உணவிற்கு பழக்கப்பட்ட அப்துல் கலாம் இறுதிவரை சைவ உணவை மட்டுமே உண்டார்.

APJ Abdul Kalam

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்தார். அக்னி மற்றும் பிரத்வி என்ற ஏவுகணைகளின் மூளையாக இருந்த கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையான ரோகினி செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்கு வகித்தார். தன் வாழ்நாளில் 40 தேசிய மற்றும் பன்னாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1981 ஆம் ஆண்டு பத்மபூஷன் 1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் 1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா என பல உயரிய பெற்றவர்.

2011ம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இளைஞர்களால் தான் வல்லரசு இந்தியாவை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். எப்பொழுதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் உரையாற்றுவதில் பெரிதும் நாட்டமுடையவர்.

Abdul Kalam

இந்தியாவிற்கே பெருமை சேர்த்த நம் அப்துல் கலாம் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் எம் ஐ டி மாணவர்கள் முன்பு உரையாற்றுக் கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பால் உயர்நீத்தார். இன்று (ஜூலை 27) நம் அப்துல் கலாமிற்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews