நடிகர் எம்ஜிஆருக்காக எழுதிய பாடல் சிவாஜியின் பாடலாக மாறியது எப்படி? ரசிகர்கள் அறியாத ரகசிய தகவல்!

அந்த கால தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் எம்ஜிஆரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பொதுவாக எம்.ஜி.ஆரின் போட்டி நடிகர் ஆன சிவாஜியை வைத்து படம் இயக்குவது இல்லை. அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே பலத்த எதிர்பார்ப்புடன் போட்டிகள் நடந்து வந்த நேரம். அப்படி இருக்கும் பொழுது எம்ஜிஆர்க்கு மட்டும் பாடல் எழுதக்கூடிய ஒரு பாடல் ஆசிரியர் ஒருவர் எம்ஜிஆரின் படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். ஆனால் அந்த பாடல் எம்ஜிஆரின் படத்தில் இல்லாமல் சிவாஜியின் படத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின் அந்தப் பாடல் ஆசிரியர் நடிகர் திலகம் சிவாஜிக்கு பாடல் எழுதும் பாடல் ஆசிரியராகவே மாறியுள்ளார். நாம் கேட்டு கேட்டு ரசித்த அந்த சிவாஜியின் பாடல் முதலில் எம்ஜிஆர்க்கு எழுதப்பட்டதா என்பது ஒரு வியப்பை ஏற்படுத்தினாலும் அந்தப் பாடல் என்ன என்பது குறித்த முழு தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அந்த காலத்தில் சினிமாக்களில் நடிகர் எம்.ஜி.ஆருக்காக பல பாடல்களை எழுதி வந்த ஒரு பாடல் ஆசிரியர் தான் புலமைப்பித்தன். இவர் நடிகர் எம்.ஜி.ஆருக்காக பல பாடல்களை எழுதி உள்ளார். மேலும் அவர் எழுதிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்துள்ளது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க பாடல் எழுத்தாளர் புலமைப்பித்தன் பொதுவாக ஒரு சிவாஜி கணேசனின் சிறந்த ரசிகன். புலமைப்பித்தன் சினிமாக்களில் பாடல் எழுதுவதற்கு முன்னதாக நாடகங்களை நடத்தியும், அதில் சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும் வந்துள்ளார். அதனால் நடிப்பின் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. அந்த ஆர்வமே நடிப்பின் சிறந்த கலைஞரான சிவாஜியின் மீது அவருக்கு நல்ல மதிப்பும், மரியாதையாக மாறியுள்ளது. தன் வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகர் திலகம் சிவாஜியின் படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்பது அவரின் ஆசையாக அமைந்துள்ளது.

அந்த ஆசை கால போக்கில் ஒருமுறை நிறைவேறியுள்ளது. நடிகர் எம்ஜிஆருக்காக புலமைப்பித்தன் ஒரு பாடல் எழுதி இருந்தார். அந்த பாடல் படக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் படக்குழு அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. உடனடியாக பாடல் ஆசிரியர் புலமைப்பித்தன் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் நேரில் சந்தித்து நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதற்கு எம் எஸ் வி உனது பாடலை நான் மற்றொரு கம்பெனிக்கு விற்று விட்டேன் எனக் கூறியுள்ளார். அதாவது மற்றொரு படக்குழுவிற்காக கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். நடிகர் எம்.ஜி.ஆருக்காக எழுதிய அந்த ஒரு பாடல் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாகி உள்ள சிவகாமியின் செல்வன் படத்தில் அமைந்துள்ளது.

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை ஓரம் கட்ட ஜெயலலிதாவை களம் இறக்கிய எம்ஜிஆர்!

இந்த பாடல் நடிகர் எம் ஜி ஆர் ஐ மனதில் வைத்து எழுதி இருந்தாலும் சிவகாமியின் செல்வன் படத்தின் கதை அம்சத்திற்கும், பாடலுக்காக அமைக்கப்பட்ட டியூன் மிக பொருந்தும் படி அமைந்திருந்ததால் பாடல் இடமாற்றப்பட்டிருந்தது. மேலும் சிவகாமியின் செல்வன் படத்திற்கு அனைத்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு புலமைப்பித்தனுக்கு கிடைத்துள்ளது. அதன் பின் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அந்த காலத்தில் இந்த நிகழ்வு மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. நடிகர் எம்ஜிஆருக்காக உருவான ஒரு பாடல் அதன்பின் சிவாஜிக்காக மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. அந்த பாடலில் நடிகர் திலகம் சிவாஜி மிக சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.