பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்க உள்ள நிலையில், டாஸ்க்குகள் கடுமையாக செல்லும் எதிர்பார்ப்பினை நிச்சயம் இன்று பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவிலேயே தெரிந்தது.
காலையிலேயே சாண்டி தன்னுடைய மொக்கை ஜோக்கினை சொல்லி எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் முகின் தானாக ஒரு பாடலை கம்போஸ் செய்து பாடினார், அனைவரும் அதனை சிறப்பாக உள்ளது என்று பாராட்டினர்.
அந்தப் பாடல் குறித்து பேசிக் கொண்டிருக்கையில், பிக் பாஸிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது, நேற்று முன் தினம் பிக் பாஸிடம் மனம் திறந்து அனைவரும் பேச வேண்டும் என்று கூறப்பட்டபோது, முகின் பிக் பாஸிடம், “முகின் கன்பெஷன் ரூமுக்கு வாங்க, என்று சொல்லும்போது பயமாக உள்ளது, அதனால் முகின் ஐயா உள்ளே வாங்க ஐயா என்று சொல்லுங்கள் பாசமாக என்று கூறினார்.
அதனை நேற்றைய நிகழ்ச்சியில், அமல்படுத்தினார், பேசிக் கொண்டிருக்கும்போது, “ஐயா முகின் கன்பெஷன் ரூமுக்கு வாங்க” என்று அழைத்தார். துள்ளிக் குதித்தவாறே சென்றார் முகின்.