அஜித் நடித்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்டு 8ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்கியிருந்தார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது இந்த திரைப்படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரத்தை போனி கபூர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதன்படி வெளிநாட்டில் வெளியான படங்களின் சாதனை இப்படம் முறியடித்து வருவதாகவும், தற்போதுவரை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளர். 1 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 7.10 கோடியாகும்.
இன்னும் தமிழ்நாட்டின் வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை. அதையும் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.