நடந்து முடிந்த தேர்தல், மற்றும் தேர்தல் ரிசல்ட்டால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் விட்ட ஒரு படம் லிசா. கடந்த வெள்ளியன்று வெளியானது. ஒரு காலத்தில் மைடியர் லிசா என்று பெயர் வைத்த படம் இன்று வரை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது அது போலவே இந்த லிசா இல்லை என்றாலும் பார்க்கும் ரகம்தான்.
கணவர் இல்லாத தன் அம்மாவுக்கு துணை தேடி வைத்து விட்டு வெளிநாடு செல்ல இருக்கும் அஞ்சலி அதற்காக கொடைக்கானலில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்ல அங்கு நடக்கும் மர்மங்களை மிக திறம்பட சொல்லியுள்ளார் இயக்குனர் ராஜு விஸ்வநாத்.
அஞ்சலியுடன் , சாம் ஜோன்ஸ் என்பவர் உடன் நடித்துள்ளார்.
படம் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் பார்க்கும் ரகத்தில் உள்ளது.