பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் அறிமுகமாகியவர் ரத்னவேலு . சேது படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் முக்கியமாக பாண்டிமடம் உள்ளிட்ட காட்சிகள். விக்ரம் நடந்து செல்லும் க்ளைமாக்ஸ் காட்சிகள் பலவற்றை உணர்வுப்பூர்வமாய் ஒளிப்பதிவு செய்தவர் ரத்னவேலு.
சேது படத்தின் எதிர்பார்க்காத வெற்றி மிகப்பெரும் ஒளிப்பதிவாளராக்கியது. தொடர்ந்து பாலாவுடன் பணிபுரிந்த நந்தா படமும் இவருக்கு சிறப்பான அந்தஸ்தை வழங்கியது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவை மிக விரிவாக அழகாக முதன் முதலில் காண்பித்தது இவரது காமிராவே.
பின்பு ரஜினியின் எந்திரன் உள்ளிட்ட படங்களை ஒளிப்பதிவு செய்துவிட்டு இன்று பல ஹிந்தி, தெலுங்கு படங்கள் என இந்திய திரைப்படங்களில் மோஸ்ட் வாண்டட் ஒளிப்பதிவாளராய் இருக்கிறார் இவர்.